வீடு / சமையல் குறிப்பு / பூசணிக்காய் சாம்பார்

Photo of pumpkin sambar by Bhavani Murugan at BetterButter
573
4
0.0(0)
0

பூசணிக்காய் சாம்பார்

Feb-19-2018
Bhavani Murugan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

பூசணிக்காய் சாம்பார் செய்முறை பற்றி

குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் சாப்பிட ஏதுவான ஆரோக்கியமான உணவு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பாய்ளிங்
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. துவரம் பருப்பு-அரை கப்
  2. பூசணிக்காய் - 1சிறு துண்டு.
  3. முருங்கைக்காய்-1
  4. கத்தரிக்காய்-2
  5. உருளைக்கிழங்கு-1
  6. தக்காளி-3
  7. வெங்காயம்-1
  8. சாம்பார் பொடி - 2மேஜை கரண்டி.
  9. மஞ்சள் பொடி
  10. உப்பு
  11. எண்ணெய்
  12. பெருங்காயப் பொடி-1தேக்கரண்டி
  13. கறிவேப்பிலை
  14. மல்லி இலை
  15. கடுகு
  16. உளுத்தம் பருப்பு
  17. கறிவேப்பிலை

வழிமுறைகள்

  1. காய்கறிகளை நறுக்கிக் கொள்ளவும்.
  2. வெங்காயம், தக்காளி நறுக்கிக் கொள்ளவும்
  3. குக்கரை ஸ்டவில் வைத்து எண்ணெய் ஊற்றி கடுகு உளுத்தம் பருப்பு கறிவேப்பிலை தாளித்து அதனுடன் நறுக்கிய வெங்காயத்தை சேர்க்கவும் பிறகு தக்காளி சேர்க்கவும் பிறகு காய்கறிகளை சேர்த்து வதக்கவும். உப்பு சேர்க்கவும்
  4. பிறகு அதனுடன் பருப்பு சேர்த்து தண்ணீர் விடவும். 3விசில் வைக்கவும்.
  5. பிறகு அதனுடன் மஞ்சள் பொடி பெருங்காயப் பொடி சாம்பார் பொடி சேர்த்து கொதிக்க விடவும்.
  6. மல்லி இழை சேர்க்கவும். சாம்பார் ரெடி.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்