வீடு / சமையல் குறிப்பு / சுரைக்காய் கூட்டு

Photo of Bottle guard Kootu by Paramasivam Sumathi at BetterButter
268
5
0.0(0)
0

சுரைக்காய் கூட்டு

Feb-19-2018
Paramasivam Sumathi
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

சுரைக்காய் கூட்டு செய்முறை பற்றி

முற்றின காய்ந்த சுரைக்காய் ஓட்டை இசைக்கருவியாகவும், மீன்பிடிக்கும் கருவியாகவும், நீச்சல் கற்கப் பயன்படும் கருவியாகவும் பயன்படுத்துகின்றனர். சுரைக்காய் குடுவைகளைப் பாத்திரமாகவும் சிலர் பயன்படுத்துகின்றனர். சுரைக்காயின் இலை, கொடி, காய், விதை அனைத்தும் மருத்துவப் பயன் கொண்டவை. Contest -14

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. சுரைக்காய் -1
  2. பாசிப்பருப்பு - 4தேக்கரண்டி
  3. கடலைப்பருப்பு -2 தேக்கரண்டி
  4. உப்பு - தேவையான அளவு
  5. மிளகாய்த்தூள் - 2 தேக்கரண்டி
  6. மஞ்சள்தூள் - 1/2 தேக்கரண்டி
  7. தேங்காய் எண்ணெய் - 1 தேக்கரண்டி
  8. பெருங்காயம் - சிட்டிகை
  9. தக்காளி - 1
  10. வெங்காயம் - 1
  11. கறிவேப்பிலை - சிறிதளவு
  12. மல்லித்தழை - சிறிதளவு

வழிமுறைகள்

  1. சுரைக்காயை வெட்டி வைத்து கொள்ளவும்.
  2. பின் வெங்காயம், தக்காளியையும் வெட்டி ஒரு குக்கரில் போடவும்.
  3. அதனுடன் சுரைக்காய், மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், உப்பு, பெருங்காயம், கடலைப்பருப்பு, பாசிப்பருப்பு சேர்த்து 3 விசில் விடவும்.
  4. விசில் அடங்கியதும், ஒரு வாணலியில் தேங்காய் எண்ணெய் விடவும்.
  5. பின் கடுகு சீரகம் தாளித்து, கறிவேப்பிலை போட்டு வதக்கவும்.
  6. இதனுடன் சுரைக்காய் கூட்டும் சேர்த்து கிளறவும்.
  7. இதன் மேல் மல்லி தழை போட்டு பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்