வீடு / சமையல் குறிப்பு / மிக்ஸடு காய்கறி மிளகு கூட்டு

Photo of Mixed veggies pepper kuttu by Krishnasamy Vidya Valli at BetterButter
412
3
0.0(0)
0

மிக்ஸடு காய்கறி மிளகு கூட்டு

Feb-19-2018
Krishnasamy Vidya Valli
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

மிக்ஸடு காய்கறி மிளகு கூட்டு செய்முறை பற்றி

எல்லா நாட்டு காய்களையும் போட்டு செய்யும் பத்திய கூட்டு. பெண்களுக்கு பிரசவகாலத்திற்கு பின் சாப்பிட கொடுப்பார்கள்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பிரெஷர் குக்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. நாட்டுக்காய்கள் (புடலங்காய் அவரக்காய் கொத்தவரங்காய் வெள்ளரிக்காய் முருங்கைக்காய் கத்திரிக்காய் தடியங்காய் பூசணிக்காய்) இவற்றில் ஏதாவது சில காய்கள் 2 கப் எடுத்துக்கொள்ளவும்.(விருப்பப்பட்டால் சௌ சௌ கேரட் பீன்ஸ் உருளைக் கிழங்கு பச்ச பட்டாணி சேர்க்கவும்
  2. பாசி பருப்பு -1/4 கப்
  3. உப்பு -11/4 தேக்கரண்டி
  4. மஞ்சள் பொடி -1/4 தேக்கரண்டி
  5. தேங்காய் துருவல் -2 மேஜைக்கரண்டி
  6. வறுக்க
  7. துவரம் பருப்பு -1 தேக்கரண்டி
  8. உளுத்தம் பருப்பு -1 தேக்கரண்டி
  9. மிளகாய் வத்தல் -2
  10. சீரகம் -1/2 தேக்கரண்டி
  11. மிளகு -3/4 தேக்கரண்டி
  12. கட்டி பெருங்காயம் -1 சிறிய துண்டு
  13. நெய் -1/4 தேக்கரண்டி
  14. தாளிக்க
  15. தேங்காய் எண்ணெய் -1/2 தேக்கரண்டி
  16. கடுகு -1 தேக்கரண்டி
  17. உளுத்தம் பருப்பு -1 தேக்கரண்டி
  18. மிளகாய் வத்தல் -2
  19. கருவேப்பிலை +2 ஆர்க்கு

வழிமுறைகள்

  1. காய்களை நறுக்கி பாசிபருப்பு உப்பு மஞ்சள் பொடி சேர்த்து குக்கரில் ஒரு விசில் வேக விடவும்
  2. வறுக்க கொடுத்தவற்றை வறுத்துக்கொள்ளவும்
  3. தேங்காய் துருவல் சேர்த்து அரைத்துக்கொள்ளவும்
  4. வேகவைத்த காய்கறிகள் பருப்புடன் அரைத்த விழுதை சேர்த்து ஒரு கொதி விடவும்
  5. தாளிக்க கொடுத்தவற்றை தாளித்து சேர்க்கவும். ஆரோக்கியமான மிக்ஸடு காய்கறிகள் மிளகு கூட்டு தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்