வீடு / சமையல் குறிப்பு / கத்திரிக்காய் பர்கர்

Photo of Brinjal Burger by Menaga Sathia at BetterButter
718
4
0.0(0)
0

கத்திரிக்காய் பர்கர்

Feb-19-2018
Menaga Sathia
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

கத்திரிக்காய் பர்கர் செய்முறை பற்றி

இந்த பர்கரில் கட்லட் பதில் கத்திரிக்காயை கட்லடாக பயன்படுத்தியுள்ளேன்.சாலட் இலைகளுக்கு பதில் ஸ்பினாச் மற்றும் சீஸ் பதில் ஆம்லட் சேர்த்துள்ளேன்.

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. பர்கர் பன் -2
  2. பெரிய கத்திரிக்காய் -1
  3. உப்பு - தேவைக்கு
  4. எண்ணெய்-தேவைக்கு
  5. வெண்ணெய் -1 டீஸ்பூன்
  6. மிளகுத்தூள்- 1/2 டீஸ்பூன்
  7. ஸ்பினாச் இலை - 4
  8. தக்காளி -1 பெரியது
  9. ஆம்லெட் செய்ய:
  10. முட்டை-3
  11. மிளகுதூள்-1/2 டீஸ்பூன்
  12. சோம்புதூள் -1/2 டீஸ்பூன்
  13. மஞ்சள்தூள் -1/4 டீஸ்பூன்

வழிமுறைகள்

  1. தக்காளி மற்றும் கத்திரிக்காயை வட்டமாக நறுக்கவும்.
  2. தவாவில் எண்ணெய் சிறிதளவு ஊற்றி கத்திரிக்காயை 2 நிமிடங்கள் வேகவிடவும்.அதன்மேல் உப்பு,மிளகுதூள் தூவிவிடவும்.
  3. ஒரு பக்கம் வெந்ததும் திருப்பி விட்டு மீண்டும் உப்பு,மிளகுதூள் தூவி வேகவைத்து எடுக்கவும்.
  4. ஆம்லெட் செய்வதற்கு முட்டையை ஒரு கிண்ணத்தில் உடைத்து ஊற்றி நன்கு அடிக்கவும்.
  5. பின் உப்பு,மிளகுதூள்,மஞ்சள்தூள், சோம்புதூள் சேர்த்து கலக்கவும்.
  6. கடாயில் எண்ணெய் ஊற்றி 2 ஆம்லட்களாக செய்து எடுக்கவும்.
  7. கடாயில் வெண்ணெய் சேர்த்து பன்களை 2 ஆக கட் செய்து . டோஸ்ட் செய்து எடுக்கவும்.
  8. பரிமாறும் முறை ஒரு பர்கரின் மேலே ஸ்பினாச் இலை வைத்து அதன் மேல் கத்திரிக்காய்,தக்காளி,ஆம்லேட் வைத்து அதன்மேல் மீண்டும் தக்காளி,கத்திரிக்காய், ஸ்பினாச் இலை பன் வைத்து பரிமாறவும்.
  9. வித்தியாசமான இந்த பர்கரை குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்