Photo of Bittergourd Tomato Curry by Asiya Omar at BetterButter
357
4
5.0(0)
0

Bittergourd Tomato Curry

Feb-20-2018
Asiya Omar
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

Bittergourd Tomato Curry செய்முறை பற்றி

பாகற்காய்,வெங்காயம்,தக்காளி சம அளவு சேர்த்து கூட்டு போல் செய்தால் மிக அருமை.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பாகற்காய் - 200 கிராம்
  2. சின்ன வெங்காயம் அல்லது பெரிய வெங்காயம் -200 கிராம்
  3. தக்காளி -200 கிராம்
  4. பச்சை மிளகாய் -2
  5. மஞ்சள் தூள்-1/2 தேக்கரண்டி
  6. மிளகாய்த்தூள் -1/2-1 தேக்கரண்டி
  7. உப்பு -சுவைக்கு
  8. எண்ணெய் -2 -3 மேஜைக்கரண்டி.

வழிமுறைகள்

  1. பாகற்காய் அலசி விதை நீக்கி சிறியதாக நறுக்கவும்,அதே போல் வெங்காயம்,தக்காளி,மிளகாய் நறுக்கவும்.
  2. வாணலியில் எண்ணெய் சூடு செய்து நறுக்கிய வெங்காயம்,பாகற்காய்,தக்காளி,மிளகாய்அனைத்தையும் சேர்த்து உப்பும் போட்டு மூடி வதங்க விடவும்.
  3. வதங்கி வரும் பொழுது மஞ்சள் தூள்,மிளகாய்த்தூள் காரத்திற்கேற்ப சேர்த்து பிரட்டி மூடி சிம்மில் வைக்கவும்.
  4. எல்லாம் சேர்ந்து வெந்து எண்ணெய் மேலே வரும்.அடுப்பை அணைக்கவும்.
  5. சுவையான பாகற்காய் தக்காளி கூட்டு தயார்.சூடு சாதம்,கெட்டிபருப்பு,அப்பளம்,ரசம்,மோர்,இந்தக்கூட்டு போதும்.செமை பொருத்தம்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்