வீடு / சமையல் குறிப்பு / பட்டாணி புதினா புலவ்

Photo of Peas pudina pulav by Divya Harikumaran at BetterButter
454
4
0.0(0)
0

பட்டாணி புதினா புலவ்

Feb-20-2018
Divya Harikumaran
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

பட்டாணி புதினா புலவ் செய்முறை பற்றி

புதினாவால் செய்ய பட்ட பட்டாணி புலாவ்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டிபன் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. ப.அரிசி - 1 கப்
  2. புதினா - 2 கப்
  3. பச்சை பட்டாணி - 1/2 கப்
  4. பெரிய வெங்காயம் - 2
  5. பச்சை மிளகாய் - 2
  6. கருவேப்பிலை - கொஞ்சம்
  7. எண்ணெய் - 5 ஸ்பூன்
  8. பட்டை - 2 துண்டு
  9. பிரிஞ்சி இலை - 1
  10. அண்ணாச்சி பூ - 1
  11. லவங்கம் - 4
  12. சோம்பு - 1 ஸ்பூன்
  13. இஞ்சி பூண்டு விழுது- 2 ஸ்பூன்
  14. உப்பு - தே. அளவு

வழிமுறைகள்

  1. முதலில் குக்கர் வைத்து, அதில் எண்ணெய் விட்டு பட்டை, கிராம்பு, பிரிஞ்சி இலை, அண்ணாச்சி பூ, சோம்பு போட்டு வதக்கவும்.
  2. பின் கறிவேப்பிலை, பச்சை மிளகாய், வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது போட்டு வதக்கவும்.
  3. பின் புதினா(மிக்சியில் புதினா போட்டு அரைத்து கொள்ளவும்) போடவும், பச்சை பட்டாணி போட்டு நன்கு வதக்கவும்.
  4. பச்சை வாசனை போன பின் தண்ணீர் ( 1கப் அரிசிக்கு 2 கப் தண்ணிர்) ஊற்றவும்.
  5. உப்பு போடவும், தண்ணிர் கொதி வந்தவுடன், ப. அரிசி போட்டு கிளறவும்.
  6. குக்கர் முடி போட்டு 3 விசில் வந்தவுடன் இறக்கவும். ரெடி.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்