வீடு / சமையல் குறிப்பு / வெஜிடபிள் பிரியாணி

Photo of Vegetable Biriyani by விருதை சமையல் at BetterButter
58
5
0.0(0)
0

வெஜிடபிள் பிரியாணி

Feb-20-2018
விருதை சமையல்
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

வெஜிடபிள் பிரியாணி செய்முறை பற்றி

வெஜிடபிள் பிரியாணி

செய்முறை டாக்ஸ்

 • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

 1. பாஸ்மதி அரிசி - 1/4 கிலோ
 2. பச்சை மிளகாய் - 3
 3. பெரிய வெங்காயம் - 1 (நீளமாக நறுக்கியது)
 4. தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)
 5. காரட் - 1 (பொடியாக நறுக்கியது)
 6. முருங்கை பீன்ஸ் - 5
 7. உருளைக்கிழங்கு - 1 (பொடியாக நறுக்கியது)
 8. காளிபிளவர் - சிறிதளவு
 9. பச்சைப்பட்டாணி - 1 கைப்பிடி அளவு
 10. இஞ்சி, பூண்டு விழுது - 2 தேக்கரண்டி
 11. தயிர் - 1/4 கப்
 12. எண்ணெய் - 2 தேக்கரண்டி
 13. நெய் - 2 தேக்கரண்டி 
 14. பிரியாணி இலை - 1
 15. ஏலக்காய் – 2
 16. கிராம்பு - 2
 17. மிளகாய்த்தூள் – 2 தேக்கரண்டி
 18. மஞ்சள்தூள் – 1 /2 தேக்கரண்டி
 19. பிரியாணி பொடி - 1 தேக்கரண்டி 
 20. கொத்தமல்லி, புதினா - தேவையான அளவு
 21. உப்பு – தேவையான அளவு

வழிமுறைகள்

 1. குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் மற்றும் நெய் விட்டு பிரியாணி இலை, ஏலக்காய், கிராம்பு சேர்க்கவும்.
 2. பின்னர் நீளமாக நறுக்கி வைத்துள்ள வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
 3. வெங்காயம் நன்கு வதங்கியவுடன் பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக நன்கு வதக்கிக் கொள்ளவும்.
 4. பின் தக்காளி சேர்த்து நன்கு மசியுமாறு வதக்கிக் கொள்ளவும்.
 5. பின் மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், பிரியாணி பொடி சேர்த்து சிறிது தண்ணீர் தெளித்து பச்சை வாசனை போகுமளவு நன்கு கிளறவும்.
 6. பின்னர் கொத்தமல்லி, புதினா, வெட்டி வைத்துள்ள காய்கறிகள் மற்றும் தயிர் சேர்த்து வதக்கவும்
 7. இரண்டு நிமிடம் கழித்து ஊற வைத்துள்ள அரசியைச் சேர்த்து கலக்கவும்.
 8. ஒரு கப் அரிசிக்கு 2 கப் தண்ணீர் சேர்த்து மூடி விடவும்.
 9. அடுப்பை சிம்மில் வைத்து 10 நிமிடம் கழித்து தீயை அணைத்துவிடவும்.
 10. கொத்தமல்லித்தழைகளை அதன் மேல் தூவி பரிமாறவும்.
 11. சுவையான வெஜிடபிள் பிரியாணி தயார்..

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்