அம்மாவின் மட்டன் சாப்ஸ் குழம்பு | Mom’s Mutton Chops Curry in Tamil

எழுதியவர் Jyothi Rajesh  |  2nd Mar 2016  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
 • Mom’s Mutton Chops Curry recipe in Tamil,அம்மாவின் மட்டன் சாப்ஸ் குழம்பு, Jyothi Rajesh
அம்மாவின் மட்டன் சாப்ஸ் குழம்புJyothi Rajesh
 • ஆயத்த நேரம்

  10

  நிமிடங்கள்
 • சமைக்கும் நேரம்

  45

  நிமிடங்கள்
 • பரிமாறும் அளவு

  2

  மக்கள்

127

0

அம்மாவின் மட்டன் சாப்ஸ் குழம்பு recipe

அம்மாவின் மட்டன் சாப்ஸ் குழம்பு தேவையான பொருட்கள் ( Ingredients to make Mom’s Mutton Chops Curry in Tamil )

 • 1/2 கிலோ மட்டன் சாப்ஸ்
 • 2 பெரிய வெங்காயம்
 • 1 தக்காளி
 • 1 தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது
 • 1 தேக்கரண்டி சிவப்பு மிளகாய்த்தூள் (காரமாக வேண்டுமானால் கூடுதலாகச் சேர்த்துக்கொள்ளவும்)
 • 3/4 தேக்கரண்டி மல்லித்தூள்
 • 1 தேக்கரண்டி மஞ்சள் தூள்
 • 1 இன்ச் இலவங்கப்பட்டை
 • 4 கிராம்பு
 • 1 சிறிய பே இலை
 • சுவைக்கேற்ற உப்பு
 • 1 மற்றும் 1/2 தேக்கரண்டி எண்ணெய்
 • தேவையான அளவு தண்ணீர்
 • மசாலா சாந்துக்காக:
 • 1 கப் கொத்துமல்லி இலைகள்
 • 1 கப் புதினா இலைகள்
 • 4 பச்சை மிளகாய்
 • 1 தேக்கரண்டி புதிதாக திருவப்பட்ட தேங்காய்

அம்மாவின் மட்டன் சாப்ஸ் குழம்பு செய்வது எப்படி | How to make Mom’s Mutton Chops Curry in Tamil

 1. மட்டன் சாப்ஸை 3ல் இருந்து 4 முறை கழுவவும். கொஞ்சம் உப்பு மஞ்சளுடன் (சேர்வைப்பொருள் அளவில் குறிப்பிடப்படவில்லை) போதுமான தண்ணீர் விடவும். சாப்ஸ் தண்ணீரில் மூழ்குவதை உறுதி செய்யவும். 10 நிமிடங்கள் அப்படியே இருக்கட்டும்.
 2. இந்த செயல் இறைச்சியில் இருந்து வாடையை நீக்குகிறது. 10 நிமிடங்களுக்குப் பிறகு தண்ணீரை நீக்கவும். தேவையானத் தண்ணீரில் பாதி அளவு, சிவப்பு மிளகாய், மஞ்சள் தூளை சாப்ஸில் சேர்க்கவும். நன்றாகக் கலந்து 3-4 மணி நேரம் பிரிஜ்ஜில் பதப்படுத்தப்படட்டும்.
 3. வெங்காயத்தையும் தக்காளியையும் பொடியாக நறுக்கிக்கொள்க. 'மசாலா சாந்துக்காக' கீழ் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து சேர்வைப்பொருள்களையும் அரைத்துக்கொள்க. எடுத்து வைத்துக்கொள்க. பிரஷர் குககரில் சாப்ஸை கொஞ்சம் தண்ணீர் விட்டு 2ல் இருந்து 3 விசில்களுக்கு வேகவைக்கவும்.
 4. ஒரு அகலமானக் கடாயில் எண்ணெயைச் சூடுபடுத்திக்கொள்க. இலவங்கப்பட்டைகள், கிராம்பு, பே இலைகளைச் சேர்க்கவும். அதன் பிறகு பொடியாக நறுக்கப்பட்ட வெங்காயத்தைச் சேர்த்து அது மிருதுவாகும்வரை வதக்கவும். இஞ்சிப்பூண்டு விழுது சேர்த்து பச்சை வாடை போகும்வரை வேகவைக்கவும்.
 5. இப்போது பொடியாக நறுக்கப்பட்டத் தக்காளியைச் சேர்த்து அது மிருதுவாகும்வரை வதக்கவும். சிவப்பு மிளகாய்த்தூள், மல்லித்தூள், மஞ்சள்தூள், உப்பு ஆகியவற்றைச் சேர்த்து நன்றாகக் கலக்கவும். வேகவைத்த மட்டன் சாப்ஸை சேர்த்து கிட்டத்தட்ட 5 நிமிடங்கள் வேகவைக்கவும்.
 6. இப்போது அரைத்த பச்சை சாந்தைச் சேர்த்து நன்றாகக் கலந்து சிம்மில் தேவையானத் தண்ணீருடன் கிட்டத்தட்ட 15 நிமிடங்கள் அல்லது அனைத்து சேர்வைப்பொருள்களும் ஒன்றரக் கலக்கும் கலக்கும்வரை வேகவைக்கவும், சாப்ஸ் நன்றாகத் தயாரிக்கப்பட்டது.
 7. நறுக்கப்பட்ட கொத்துமல்லி இலைகளோடு அலங்கரித்து அரிசி அல்லது ரொட்டியுடன் சூடாகப் பரிமாறவும்.

Reviews for Mom’s Mutton Chops Curry in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.