வீடு / சமையல் குறிப்பு / கத்தரிக்காய் முருங்கைகாய் கார குழம்பு

Photo of Drumstic brinjal tamrind gravy by neela karthik at BetterButter
327
3
0.0(0)
0

கத்தரிக்காய் முருங்கைகாய் கார குழம்பு

Feb-20-2018
neela karthik
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

கத்தரிக்காய் முருங்கைகாய் கார குழம்பு செய்முறை பற்றி

காரசாரமாக கத்தரிக்காய் முருங்கைகாய் குழம்பு ரெசிபி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பாய்ளிங்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. கத்தரிக்காய் 2
  2. முருங்கைகாய் 1
  3. வெங்காயம் 1 பொடியாக அரிந்தது
  4. தக்காளி 1 பொடியாக அரிந்தது
  5. புளி கரைசல் 3 டேபிள் ஸ்பூன்
  6. வரமிளகாய் 2
  7. மிளகாய் தூள் 1 ஸ்பூன்
  8. மஞ்சள் தூள் 1/4 ஸ்பூன்
  9. கொத்தமல்லி தூள் 1/2 ஸ்பூன்
  10. எண்ணெய் 3 ஸ்பூன்
  11. உப்பு தேவைக்கேற்ப
  12. கடுகு தாளிக்க
  13. வெந்தயம் சிறிது 4 அல்லது 5

வழிமுறைகள்

  1. காய் மற்றும்வெங்காயம் தக்காளியை நறுக்கி வைத்து கொள்ளவும்
  2. புளி சுடு நீரில் ஊற வைத்து கரைத்து வைக்கவும்
  3. வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு வெந்தயம் சேர்த்து பொரிந்ததும் வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்
  4. பிறகு தக்காளியை வதக்கவும் அதனுடன் மல்லிதூள் மிளகாய் மஞ்சள் தூள் சேர்த்து பச்சை வாசம் போக வதக்கவும்
  5. பிறகு காய்களை சேர்த்து வதக்கி சிறிது தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும்
  6. காய் வெந்த பிறகு புளி கரைசல் சேர்த்து ஒரு கொதி வந்ததும் பெருங்காயதூள் சேர்த்து இறக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்