Photo of Banana flower Biryani by Wajithajasmine Raja mohamed sait at BetterButter
1279
9
0.0(5)
0

Banana flower Biryani

Feb-20-2018
Wajithajasmine Raja mohamed sait
70 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • சௌத்இந்தியன்
  • பிரெஷர் குக்
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. வாழைப்பூ -1 கப் கழுவி சுத்தம் செய்த்து
  2. பாஸ்மதி அரிசி -1 கப்
  3. வெங்காயம் -1
  4. தக்காளி -2 சிறியது
  5. பச்சை மிளகாய் -2
  6. தயிர் -2-3 தேக்கரண்டி
  7. இஞ்சி பூண்டு விழுது -2 தேக்கரண்டி
  8. சோம்பு -1/2 தேக்கரண்டி
  9. மிளகாய் தூள்- 1 தேக்கரண்டி அல்லது காரத்திற்கு ஏற்ப
  10. மஞ்சள் தூள்-1/2 தேக்கரண்டி
  11. மல்லித்தூள் -1/2 தேக்கரண்டி
  12. பிரியாணி மசாலா 1 தேக்கரண்டி
  13. பட்டை -1
  14. ஏலக்காய் -4
  15. கிராம்பு -4
  16. பிரியாணி இலை-1
  17. நெய்- தேவையான அளவு
  18. முந்திரி 5-6
  19. கொத்தமல்லி இலை- சிறிதளவு
  20. புதினா -சிறிதளவு
  21. உப்பு தேவையான அளவு
  22. எண்ணெய் - தேவையான அளவு

வழிமுறைகள்

  1. தேவையான பொருட்கள் 1
  2. 2 .முதலில் வாழைப்பூவை சுத்தம் செய்து கழுவி அதனுடன் தயிர் ,மஞ்சள் தூள்,மிளகாய் தூள்,மல்லித்தூள் ,பிரியாணி மசாலா ,உப்பு சேர்த்து நன்கு கலந்து 30 நிமிடம் முதல் 1 மணி நேரம் ஊற வைக்கவும் .
  3. பாஸ்மதி அரிசியையும் கழுவி 30 நிமிடம் ஊற வைத்துக்கொள்ளவும்.
  4. அடுப்பில் குக்கரை வைத்து அதில் நெய் மற்றும் எண்ணெய் ஊற்றி பட்டை ,ஏலக்காய் ,கிராம்பு,பிரியாணி இலை,முந்திரி சேர்த்து வதக்கி பிறகு அதனுடன் நறுக்கிய வெங்காயத்தை சேர்க்கவும் .
  5. வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் அதனுடன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசம் போகும் வரை வதக்கவும்.பிறகு தக்காளி ,பச்சை மிளகாய் ,மல்லி,புதினா இலைகளை சேர்த்து வதக்கவும் .
  6. தக்காளி நன்கு வெந்ததும் ஊற வைத்த வாழைப்பூவை சேர்த்து சிறிது நேரம் கிளறவும்.
  7. இப்பொழுது இதனுடன் தேவையான அளவு தண்ணீர் (1 கப் அரிசிக்கு 1 1/2 கப் தண்ணீர் ) ஊற்றி ஊற வைத்த அரிசி தேவையான அளவு உப்பு சேர்த்து குக்கரை மூடி விசில் வரை வைக்கவும்.
  8. இரண்டு விசில் வந்ததும் அடுப்பில் இருந்து இறக்கவும்
  9. இப்பொழுது சுவையான எளிமையான வாழைப்பூ பிரியாணி தயார் ...
  10. தயிர் பச்சடி உடன் பறிமாறவும்.

மதிப்பீடு (5)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Lalitha Venkat
Feb-21-2018
Lalitha Venkat   Feb-21-2018

Tasty n healthy biryani

Hameetha Banu
Feb-20-2018
Hameetha Banu   Feb-20-2018

Super

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்