வீடு / சமையல் குறிப்பு / மீன் குழம்பு/ தேங்காய் சேர்த்து மீன் குழம்பு

Photo of Meen Kulambu/Fish Curry with Coconut by Poornima Porchelvan at BetterButter
4647
40
0.0(0)
0

மீன் குழம்பு/ தேங்காய் சேர்த்து மீன் குழம்பு

Mar-03-2016
Poornima Porchelvan
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

 • நான் வெஜ்
 • மீடியம்
 • தினமும்
 • தமிழ்நாடு
 • பாய்ளிங்
 • மெயின் டிஷ்
 • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

 1. மீன் - 10 துண்டுகள் (சுத்தப்படுத்தப்பட்டு வழக்கமானத் துண்டுகளாக வெட்டப்பட்டது)
 2. வெங்காயம் - 1 நறுக்கப்பட்டது
 3. தக்காளி - 1 (நறுக்கப்பட்டது)
 4. பூண்டு - 2 அல்லது 3 பற்கள் (பொடியாக நறுக்கப்பட்டது)
 5. புளி - 1 பெரிய எலுமிச்சை அளவு
 6. மல்லித்தூள் - 4 தேக்கரண்டி
 7. மிளகாய்த்தூள் - 2 தேக்கரண்டி
 8. மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
 9. எண்ணெய் - 2 தேக்கரண்டி
 10. சுவைக்கேற்ற உப்பு
 11. அரைப்பதற்கு: தேங்காய் -1/2 கப் (துருவப்பட்டது), பெருஞ்சீரகம் - 1/4 தேக்கரண்டி (விரும்பினால்)
 12. தாளிப்புக்கு: வெந்தயம் - 1 தேக்கரண்டி, கரிவேப்பிலை - கொஞ்சம், பெருஞ்சீரகம் - 1தேக்கரண்டி

வழிமுறைகள்

 1. தேங்காயையும் பெருஞ்சீரகத்தையும் கொஞ்சம் தண்ணீர் விட்டு சாந்தாக அரைத்து, எடுத்து வைக்கவும். புளியை 2 கப் தண்ணீரில் ஊறவைக்கவும்.
 2. அகலமான கடாயில் எண்ணெய் சேர்த்து வெந்தயம், பெருஞ்சீரகம், கரிவேப்பிலை சேர்த்து பதப்படுத்தவும்.
 3. வெடிக்க ஆரம்பித்ததும். பூண்டு வெங்காயம், பச்சை மிளகாயை வறுத்து மசாலா பவுடர்களைச் சேர்த்து சிறிது நேரம் வறுக்கவும். உடனே தக்காளி உப்பு சேர்க்கவும். கடாயில் ஒட்டுவதாகத் தெரிந்தால் கொஞ்சம் தண்ணீர் சேர்க்கவும்.
 4. தக்காளி உருகியதும், புளி சாறையும் தேங்காய் சாந்தையும் சேர்த்துக்கொள்ளவும். நன்றாகக் கலக்கி கொதிக்கவிட்டு 10 நிமிடங்களுக்கு வேகவைக்கவும்.
 5. எண்ணெய் வானலியின் பக்கவாட்டிலிருந்து விலக ஆரம்பித்ததும், மீனை சேர்க்கவும். சிம்மில் 5 நிமிடங்களக்கு மூடிவைத்துவிட்டு, அடுப்பை நிறுத்துவதற்கு முன் கொஞ்சம் கரிவேப்பிலையைச் சேர்த்து மூடிவைக்கவும், சுவையை அதிகரிப்பதற்கு.
 6. சிறிது நேரம் விட்டுவைக்கவும். ஆவிபறக்கும் சாதம், இட்லி அல்லது தோசையுடன் சூடாகப் பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்