வீடு / சமையல் குறிப்பு / பீன்ஸ் பொரியல்

Photo of Beans poriyal by Paramasivam Sumathi at BetterButter
367
4
0.0(0)
0

பீன்ஸ் பொரியல்

Feb-20-2018
Paramasivam Sumathi
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

பீன்ஸ் பொரியல் செய்முறை பற்றி

பீன்ஸ் பொரியல் சிறுநீரக கல்லை கரைக்க உதவும் சிறந்த மருந்து. Contest-18

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • ஹை ஃபைபர்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பீன்ஸ் - 1/2 கிலோ
  2. வெங்காயம்-1
  3. பச்சை மிளகாய் - 2
  4. மஞ்சள் தூள் சிறிதளவு
  5. பெருங்காயத்தூள் 1 சிட்டிகை
  6. கறி வேப்பிலை சிறிதளவு
  7. உப்பு தேவையான அளவு
  8. தேங்காய் துருவல் 2 தேக்கரண்டி
  9. தேங்காய் எண்ணெய் 1 தேக்கரண்டி
  10. கடுகு சிறிதளவு
  11. உடைத்த உளுந்து சிறிதளவு
  12. சீரகம் 1/2 தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. பீன்சை தண்ணீரில் நன்கு கழுவி சுத்தம் செய்து சிறுசிறு துண்டுகளாக நறுக்கவும்.
  2. கடாயில் தேங்காய் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்து, சீரகம் சேர்த்து தாளிக்கவும்.
  3. பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கறி வேப்பிலை சேர்த்து வதக்கவும்.
  4. உப்பு, மஞ்சள் தூள், பெருங்காயத்தூள் சேர்த்து வதக்கவும்.
  5. இந்த கலவையில் நறுக்கிய பீன்ஸ் சேர்த்து வதக்கி சிறிது தண்ணீர் சேர்த்து வேக விடவும்.
  6. சிறிது நேரம் வெந்ததும் தேங்காய் துருவல் சேர்த்து கிளறி பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்