வீடு / சமையல் குறிப்பு / கடாய் காளான்

Photo of Kadai mushroom by khadheeja irfana at BetterButter
65
4
0.0(0)
0

கடாய் காளான்

Feb-20-2018
khadheeja irfana
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

கடாய் காளான் செய்முறை பற்றி

Restaraunt style tasty mushroom dish

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • மகாராஷ்டிரம்
  • ஸாட்டிங்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. காளான் - 250 கிராம்
  2. குடைமிளகாய் - 1
  3. வெங்காயம் - 1
  4. தக்காளி - 2
  5. இஞ்சிபூண்டு விழுது - 1 தே. க
  6. மஞ்சள் தூள் - 1/4 தே. க
  7. காய்ந்த வெந்தய கீரை இலை - 1 தே. க
  8. உப்பு - சுவைக்கேற்ப
  9. எண்ணெய் - 3 மே. க
  10. தண்ணீர் - 1/2 கப்
  11. கொத்தமல்லி இலை - அலங்கரிக்க
  12. இஞ்சி -1/2 துண்டு அலங்கரிக்க
  13. கடாய் மசாலா தயாரிக்க:
  14. கொத்தமல்லி விதை - 1 மே. க
  15. காய்ந்த வத்தல் - 3
  16. சீரகம் - 1/2 தே. கே
  17. கருவா பட்டை - 1/2 துண்டு
  18. ஏலம் - 1
  19. கிராம்பு - 2
  20. மிளகு - 4

வழிமுறைகள்

  1. கடாய் மசாலா தயாரிக்க தேவையான பொருட்களை ஒரு கடாயில் போட்டு வாசனை வரும் வரை மிதமான தீயில் வெருப்பி எடுக்கவும்.அதை மிக்சியில் பொடித்து வைத்து கொள்ளவும்.
  2. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி நறுக்கிய காளான்களை போட்டு நன்றாக வதக்கவும்.வதக்கிய காளான்களை தனியாக எடுத்து வைக்கவும்.
  3. அதே கடாயில் வெங்காயம் போட்டு நன்கு பொரிந்ததும் இஞ்சிபூண்டு விழுது சேர்த்து பச்சை வாடை போகும் வரை நன்றாக வதக்கவும்.
  4. தக்காளியை விழுதாக அரைத்து வைத்து கொள்ளவும்.
  5. அரைத்த தக்காளி விழுதை சேர்க்கவும்.எண்ணெய் பிரிந்து வரும் வரை நன்கு வதக்கவும்.பின்பு நீளமாக நறுக்கிய குடைமிளகாய் சேர்த்து 5 நிமிடம் வதக்கவும்.
  6. தயார் செய்து வைத்த கடாய் மசாலாவை சேர்த்து நன்றாக வதக்கவும்.
  7. 1/2 கப் தண்ணீர் உப்பு சேர்த்து மிதமான தீயில் கொதிக்க விடவும்.வதக்கி வைத்த காளான்களை சேர்த்து கிளறி விடவும்.
  8. காய்ந்த வெந்தய இலைகளை சேர்த்து அடுப்பை அனைத்து விடவும்.சுவையான கடாய் காளான்கள் தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்