வீடு / சமையல் குறிப்பு / கத்திரிக்காய் வறுவல்

Photo of Brinjal fry by Asiya Omar at BetterButter
312
4
0.0(0)
0

கத்திரிக்காய் வறுவல்

Feb-20-2018
Asiya Omar
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

கத்திரிக்காய் வறுவல் செய்முறை பற்றி

இந்த வறுவல் செய்ய பூண்டு மணத்துடன் கூடிய மசாலா தயார் செய்து வறுப்பதால் செமை.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • ஷாலோ ஃபிரை
  • சைட் டிஷ்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பெரிய கத்திரிக்காய் -1/2 கிலோ
  2. எண்ணெய் -தவாவில் வறுக்க தேவையான அளவு.
  3. அரைக்க வேண்டியது:-
  4. பூண்டு (முழுதாக ஒன்று)-15 பற்கள்
  5. காஷ்மீரி மிளகாய்த்தூள் -1 மேஜைக்கரண்டி
  6. சீரகத்தூள்-1 தேக்கரண்டி
  7. மஞ்சள் தூள் -1/2 தேக்கரண்டி
  8. கார்ன் மாவு-2-3 மேஜைக்கரண்டி
  9. எண்ணெய் -1 மேஜைக்கரண்டி
  10. கால் கப் தண்ணீர்
  11. உப்பு -1.1/2 தேக்கரண்டி அல்லது சுவைக்கு
  12. எல்லாம் சேர்த்து அரைக்கவும்.

வழிமுறைகள்

  1. கத்திரிக்காயை நன்கு அலசி வட்டமாக நறுக்கவும்.
  2. மேற்சொன்ன தேவையான பொருட்கள் சேர்த்து மிக்சி சின்ன ஜாரில் அரைக்கவும்.
  3. அரைத்ததை ஒரு தட்டில் எடுத்து வைக்கவும்
  4. வட்டமாக நறுக்கிய கத்திரிக்காய் துண்டுகள் மீது ஒன்றொன்றாக எடுத்து அரைத்த மசால் தடவி வைக்கவும்.அரை மணி நேரம் ஊற விடலாம்.
  5. தவாவில் தேவைக்கு எண்ணெய் சூடு செய்து கத்திரிக்காய் துண்டுகளை போடவும்.
  6. இருபுறம் வெந்து சிவந்ததும் எண்ணெய் வடித்து எடுக்கவும்.
  7. சூப்பராக இருக்கும்..டேஸ்ட் பாருங்க.
  8. மல்லி,கருவேப்பிலை நறுக்கி அலங்கரித்து பரிமாறவும்.சாதம் வகைகளுக்கு பக்க உணவாகப் பரிமாறலாம்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்