பீன்ஸ் கூரா | Beans koora in Tamil

எழுதியவர் Ayesha Ziana  |  20th Feb 2018  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
 • Beans koora recipe in Tamil,பீன்ஸ் கூரா, Ayesha Ziana
பீன்ஸ் கூராAyesha Ziana
 • ஆயத்த நேரம்

  10

  நிமிடங்கள்
 • சமைக்கும் நேரம்

  30

  நிமிடங்கள்
 • பரிமாறும் அளவு

  4

  மக்கள்

2

0

பீன்ஸ் கூரா recipe

பீன்ஸ் கூரா தேவையான பொருட்கள் ( Ingredients to make Beans koora in Tamil )

 • பீன்ஸ் 20
 • புளி நெல்லிக்காய் அளவு
 • மஞ்சள் தூள் 1/4 ஸ்பூன்
 • உப்பு தேவைக்கு
 • வெங்காயம் 1 பொடியாக நறுக்கியது
 • தக்காளி 1 பொடியாக நறுக்கியது
 • பூண்டு 5 பல்
 • அரைக்க: நிலக்கடலை ஒரு கையளவு
 • தேங்காய் துருவல் 1 டேபிள் ஸ்பூன்
 • மல்லித்தூள் அல்லது முழு மல்லி 1 1/2 ஸ்பூன்
 • காய்ந்த மிளகாய் 3
 • பட்டை சிறு துண்டு
 • லவங்கம் 4
 • மிளகு 10
 • பூண்டு 3 பல்
 • தாளிக்க: கடுகு 1 ஸ்பூன்
 • சீரகம் 1 ஸ்பூன்
 • உளுந்து 1 ஸ்பூன்
 • கடலை பருப்பு 1 ஸ்பூன்
 • காய்ந்த மிளகாய் 2

பீன்ஸ் கூரா செய்வது எப்படி | How to make Beans koora in Tamil

 1. வாணலியில் எண்ணெய் ஊற்றி தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை வைத்து தாளிக்கவும்.
 2. பின்னர், நறுக்கிய வெங்காயம், பூண்டு, தக்காளி, மஞ்சள் தூள் சேர்த்து நன்கு வதக்கவும்.
 3. அரைக்க கொடுத்துள்ள பொருட்களை மிக்ஸியில் மை போல அரைக்கவும். இதனையும் வாணலியில் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை நன்கு கிளறவும்.
 4. பின்னர், தேவையான அளவு தண்ணீர், உப்பு, புளிக்கரைசல் சேர்த்து நறுக்கிய பீன்ஸையும் சேர்த்து வேக விடவும்.
 5. பீன்ஸ் நன்கு வெந்து கிரேவி அல்லது செமி கிரேவி பதம் வந்ததும் அடுப்பை அணைத்து விடவும்.
 6. சூப்பரான பீன்ஸ் கூரா தயார். இது சாதத்திற்கும், சப்பாத்தி பூரி இட்லி தோசை உள்பட எல்லா டிபன்களுக்கும் நல்ல சைட் டிஷ்.

எனது டிப்:

காரம் விருப்பப்படி சேர்க்கலாம். இதை ட்ரை கறியாகவும் செய்யலாம்.

Reviews for Beans koora in tamil (0)