Photo of Mango Sambar by Wajithajasmine Raja mohamed sait at BetterButter
461
6
0.0(4)
0

Mango Sambar

Feb-20-2018
Wajithajasmine Raja mohamed sait
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • சௌத்இந்தியன்
  • சூப்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. மாங்காய் -1
  2. துவரம் பருப்பு - 1 கப்
  3. சின்ன வெங்காயம் -10-15
  4. தக்காளி -1
  5. பச்சை மிளகாய் -2
  6. மஞ்சள் தூள் - சிறிதளவு
  7. சாம்பார் பொடி - தேக்கரண்டி
  8. உப்பு -தேவையான அளவு
  9. எண்ணெய் - தேவையான அளவு
  10. தாளிக்க :
  11. கடுகு - 1 தேக்கரண்டி
  12. வெந்தயம - 1/4 தேக்கரண்டி
  13. கருவேப்பிலை -சிறிதளவு
  14. பெருங்காயத்தூள்- சிறிதளவு

வழிமுறைகள்

  1. தேவையான பொருட்கள் :
  2. முதலில் துவரம்பருப்பை கழுவி குக்கரில் மஞ்சள் தூள் சேர்த்து வேக வைத்துக்கொள்ளவும்.
  3. அடுப்பில் பாத்திரத்தை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயத்தை போட்டு வதக்கவும் .
  4. வெங்காயம் வதங்கியதும் தக்காளி ,பச்சை மிளகாய் சிறிதளவு உப்பு சேர்த்து நன்கு வதக்கவும் .
  5. பிறகு நறுக்கிய மாங்காய் துண்டுகளை சேர்த்து வதக்கவும் .
  6. இப்பொழுது சிறிதளவு மஞ்சள் தூள், சாம்பார் பொடியை சேர்த்து நன்கு வதக்கி தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மாங்காயை வேகவிடவும்.
  7. மாங்காய் நன்றாக வெந்த்தும் வேகவைத்துள்ள துவரம் பருப்பை சேர்க்கவும் .
  8. பருப்பு சேர்த்து உப்பு ,காரம் பார்த்து சிறிது நேரம் கொதிக்கவிடவும் .
  9. இப்பொழுது அடுப்பில் இருந்து இறக்கி எண்ணெயில் தாளிப்புகளை சேர்த்து சாம்பாரில் சேர்க்கவும்.
  10. சுவையான மாங்காய் சாம்பார் தயார்...
  11. தோசை மற்றும் சாதத்திற்கு ஏற்ற அருமையான சாம்பார்.

மதிப்பீடு (4)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
BetterButter Editorial
Feb-21-2018
BetterButter Editorial   Feb-21-2018

Hi Wajithajasmine, collage images are not allowed, kindly share a clear and single image of this dish. To edit the image, please go to the recipe image and click on the 'pen icon' on the right top side and edit the image. Thanks!

Lalitha Venkat
Feb-21-2018
Lalitha Venkat   Feb-21-2018

Yummy in the tummy

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்