Photo of Veg kadai by Krishnasamy Vidya Valli at BetterButter
669
3
0.0(0)
0

வெஜ் கடாய்

Feb-21-2018
Krishnasamy Vidya Valli
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

வெஜ் கடாய் செய்முறை பற்றி

இது பஞ்சாபி சைட்டிஷ். இதற்காக செய்யப்படும் மசாலா தான் இதற்கான சுவைக்கு காரணம். நாண்/சப்பாத்தி/ரைஸ் எதற்கும் தொட்டுக்கொள்ளலாம்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டின்னெர் பார்ட்டி
  • பஞ்சாபி
  • பாய்ளிங்
  • சைட் டிஷ்கள்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. வெங்காயம் -1
  2. தக்காளி -2
  3. குடைமிளகாய் -1
  4. உருளைக் கிழங்கு, கேரட்,பச்ச பட்டாணி -பொடியாக நறுக்கியது -1 கப்
  5. உப்பு -3/4 தேக்கரண்டி
  6. மஞ்சள் பொடி -1/2 தேக்கரண்டி
  7. காஷ்மீர் சில்லி பவுடர் -1/2 தேக்கரண்டி
  8. ப்ரஷ் கிரீம் -1மேஜைக்கரண்டி
  9. கொத்தமல்லி இலை - பொடியாக நறிக்கியது -2 தேக்கரண்டி
  10. வறுத்து திரிக்க
  11. கொத்தமல்லி விதை -1 மேஜைக்கரண்டி
  12. மிளகாய் வத்தல் -4
  13. மிளகு -1/2 தேக்கரண்டி
  14. சீரகம் -1/2 தேக்கரண்டி
  15. கஸுரி மேத்தி -1 தேக்கரண்டி
  16. முந்திரி பருப்பு -6 முதல் 8
  17. பட்டை -1 சிறிய துண்டு
  18. ஏலக்காய் கிராம்பு -தலா 3
  19. எண்ணெய் -2 டிராப்ஸ்
  20. தாளிக்க
  21. எண்ணெய் -3 தேக்கரண்டி
  22. சீரகம் -1 தேக்கரண்டி
  23. இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. கொடுக்கப்பட்ட காய்களை நறுக்கிக்கொள்ளவும்
  2. வறுக்க கொடுத்தவற்றை வறுத்துக்கொள்ளவும்
  3. ஆறவைத்து மிக்ஸியில் திரிக்கவும்
  4. தக்காளியை அரைத்துக்கொள்ளவும்
  5. தாளிக்க கொடுத்தவற்றை தாளித்து(எண்ணெய் பாதியளவு விடவும்) பாதியளவு வெங்காயம் போட்டு வதக்கவும்
  6. பச்ச வாசனை போனவுடன் குடைமிளகாய் சேர்த்து வதக்கவும்
  7. தனியாக எடுத்து வைத்து விட்டு மீதமுள்ள எண்ணெய் வெங்காயம் சேர்த்து வதக்கவும்
  8. பச்ச வாசனை போனவுடன் அரைத்த தக்காளியை சேர்த்து வதக்கவும்.
  9. மஞ்சள் பொடி உப்பு காஷ்மீர் சில்லி பவுடர் சேர்த்து கிளறவும்
  10. பச்ச வாசனை போனவுடன் மற்ற காய்கறிகள் சேர்த்து வதக்கவும்.
  11. சிறிது தண்ணீர் விட்டு மூடி வேக விடவும்
  12. முதலில் வதக்கிய வெங்காயம் குடைமிளகாய் சேர்க்கவும்
  13. வறுத்து திரித்ததை சேர்க்கவும்
  14. கிரேவி மிகவும் கெட்டியாக இருந்தால் சிறிது தண்ணீர் சேர்க்கவும். செமிசாலிட் கன்ஸிஸ்டன்ஸி வந்தவுடன் ப்ரஷ் கிரீம் சேர்த்து இறக்கிவிடவும்
  15. கொத்தமல்லி இலையை தூவி பறிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்