வீடு / சமையல் குறிப்பு / வாழைப்பூ பருப்பு உசிலி

Photo of Banana flower Paruppu Usili by Krishnasamy Vidya Valli at BetterButter
418
4
0.0(0)
0

வாழைப்பூ பருப்பு உசிலி

Feb-21-2018
Krishnasamy Vidya Valli
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

வாழைப்பூ பருப்பு உசிலி செய்முறை பற்றி

வாழைப்பூ உடலுக்கு மிகவும் நல்லது. அதிலும் குறிப்பாக பெண்களுக்கு மாதவிடாய் பிரச்சனைகளை சரி செய்ய வல்லது இந்த வாழைப்பூ. அதைவைத்து செய்யும் கறிவகை இது.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. வாழைப்பூ -1
  2. (வாழைப்பூவை நறுக்கி போட மோர் ஒரு குழம்பு கரண்டி தேவை)
  3. உப்பு -3/4 தேக்கரண்டி
  4. மஞ்சள் பொடி -1/2 தேக்கரண்டி
  5. தேங்காய் துருவல் -1 மேஜைக்கரண்டி
  6. உசிலிக்கு தேவையானவை
  7. கடலைப்பருப்பு -2 மேஜைக்கரண்டி
  8. துவரம்பருப்பு -2 மேஜைக்கரண்டி
  9. மிளகாய் வத்தல் -2
  10. பெருங்காயம் -4 சிட்டிகை
  11. உப்பு -1/2 தேக்கரண்டி
  12. தாளிக்க
  13. கடுகு -1 தேக்கரண்டி
  14. உளுத்தம் பருப்பு -1 தேக்கரண்டி
  15. கருவேப்பிலை -3 ஆர்க்கு
  16. பெருங்காயம் -2 சிட்டிகை
  17. எண்ணெய் -3 தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. வாழைப்பூவை மோர்கலந்த தண்ணீரில் நறுக்கிக்கொள்ளவும்.
  2. உப்பு மஞ்சள் பொடி சேர்த்து அளவாக தண்ணீர் விட்டு வேக விடவும்
  3. தண்ணீர் வடித்து விடவும்
  4. பருப்பை ஊறவைக்கவும்
  5. ஊறியவுடன் மிளகாய் வத்தல் உப்பு பெருங்காயம் சேர்த்து மிக்ஸியில் கரகரப்பாக அரைக்கவும்
  6. கடாயில் தாளிக்க கொடுத்தவற்றை தாளித்து அரைத்த விழுதை சேர்த்து வதக்கவும்
  7. நல்ல உதிர்உதிரானவுடன் வாழைப்பூவை சேர்த்து வதக்கவும்
  8. தேங்காய் துருவல் கலந்து இறக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்