வீடு / சமையல் குறிப்பு / முருங்கைக்கீரை பருப்பு உசிலி

Photo of Moringa leaves dal usili by Asiya Omar at BetterButter
0
3
0(0)
0

முருங்கைக்கீரை பருப்பு உசிலி

Feb-21-2018
Asiya Omar
60 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

முருங்கைக்கீரை பருப்பு உசிலி செய்முறை பற்றி

முருங்கைக்கீரை பருப்பு உசிலி சுவையும்,சத்தும்,மணமும் நிறைந்தது.

செய்முறை டாக்ஸ்

  • శాఖాహారం
  • మీడియం/మధ్యస్థ
  • తమిళనాడు
  • సైడ్ డిషెస్
  • పౌష్టికాహారం

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. முருங்கைக்கீரை ஆய்ந்தது -2-3 கப்
  2. எண்ணெய் -2 மேஜைக்கரண்டி
  3. கடுகு,உளுத்தம் பருப்பு -தலா 1/2 தேக்கரண்டி
  4. கிள்ளிய வற்றல்-1
  5. நறுக்கிய வெங்காயம்-1
  6. பெருங்காயம்- 1/4 தேக்கரண்டி
  7. தேங்காய்த்துருவல்-2 மேஜைக்கரண்டி
  8. உப்பு -தேவைக்கு.
  9. ஊற வைத்து அரைக்க:-
  10. துவரம் பருப்பு,கடலை பருப்பு -தலா 2 மேஜைக்கரண்டி
  11. சீரகம் -1/2 தேக்கரண்டி
  12. மிளகாய் வற்றல் -3

வழிமுறைகள்

  1. பருப்பை ஊற வைக்கவும்.அத்துடன் மிளகாய் வற்றல் சீரகம் சேர்க்கவும்.
  2. ஊறிய பின்பு அரைத்து எடுக்கவும்.
  3. அதனை பாத்திரத்தில் வைத்து ஆவியில் வேகவைத்து அல்லது கொஞ்சம் என்பதால் மைக்ரோவேவில் 2 நிமிடம் வைத்தும் எடுக்கலாம்.
  4. வெந்ததை ஆறியவுடன் உதிர்த்துக் கொள்ளவும்.
  5. கீரையை ஆய்ந்து அலசி, சிறிது கொதிக்கும் தண்ணீரில் போட்டு அவித்து எடுக்கவும்.தண்ணீர் அளவாய் வைத்து வற்றும் வரை வேக விடவும்.
  6. வாணலியில் எண்ணெய் சூடானவுடன் கடுகு,உ.பருப்பு,கிள்ளிய வற்றல்,பெருங்காயம், வெங்காயம் சேர்த்து வதக்கவும். அத்துடன் தயார் செய்து வெந்த அரைத்த பருப்பு கலவையை போட்டு வதக்கவும்.அத்துடன் கீரையை சேர்க்கவும்.
  7. நன்கு ஒரு சேர பிரட்டி புட்டு போல் வரவேண்டும்.உப்பு சரி பார்க்கவும்.தேங்காய்த்துருவல் சேர்க்கவும்.
  8. நன்கு பிரட்டி விடவும். சுவையான சத்தான முருங்கைக்கீரை பருப்பு உசிலி தயார்.
  9. சூடான சாதம்,குழம்பு வகைகளுடன் பரிமாறலாம்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்