வீடு / சமையல் குறிப்பு / கருணைகிழங்கு மசியல்

Photo of Karunai kizhangu masiyal by Krishnasamy Vidya Valli at BetterButter
466
5
0.0(0)
0

கருணைகிழங்கு மசியல்

Feb-21-2018
Krishnasamy Vidya Valli
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

கருணைகிழங்கு மசியல் செய்முறை பற்றி

மூல நோயை குணப்படுத்தும் வல்லமை உள்ளது கருணைகிழங்கு . அதை வைத்து செய்யும் எண்ணெய் அதிகமில்லாத சைட்டிஷ் வெரைட்டி இது.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பிரெஷர் குக்
  • பாய்ளிங்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. கருணைகிழங்கு -4 மீடியம் ஸைஸ்
  2. துவரம் பருப்பு -1 மேஜைக்கரண்டி
  3. பச்ச மிளகாய் -2
  4. இஞ்சி -1 சிறிய துண்டு
  5. உப்பு -1 தேக்கரண்டி
  6. மஞ்சள் பொடி -1/2 தேக்கரண்டி
  7. கொத்தமல்லி இலை - பொடியாக நறுக்கியது -2 தேக்கரண்டி
  8. எலுமிச்சை சாறு -2 தேக்கரண்டி
  9. தாளிக்க
  10. எண்ணெய் -1/2 தேக்கரண்டி
  11. கடுகு -1 தேக்கரண்டி
  12. உளுத்தம் பருப்பு -1 தேக்கரண்டி
  13. கருவேப்பிலை -2 ஆர்க்கு
  14. பெருங்காயம் -4 சிட்டிகை

வழிமுறைகள்

  1. கிழங்கை நன்றாக சுத்தம் செய்து இரண்டு மூன்று துண்டுகளாக நறுக்கி குக்கரில் குழைய வேக விடவும். பருப்பை தனியாக வேகவிடவும்.
  2. கிழங்கை தோல் உரித்துக்கொள்ளவும்
  3. கடாயில் சிறிது தண்ணீர் விட்டு பச்ச மிளகாய் இஞ்சி உப்பு மஞ்சள் பொடி வேகவைத்து தோல் உரித்த கிழங்கு எல்லாம் சேர்த்து கரண்டியால் மசித்து கொதிக்கவுடவும்.
  4. வேகவைத்த பருப்பை சேர்க்கவும்
  5. கெட்டியானவுடன் இறக்கி தாளிக்க கொடுத்தவற்றை தாளித்து சேர்க்கவும். எலுமிச்சை சாறு கலந்து கொத்தமல்லி இலையை தூவி பறிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்