வீடு / சமையல் குறிப்பு / வெஜிடபிள் பால்ஸ் சிவப்பு கிரேவியில்

Photo of Vegetable Balls in Red gravy by Sowmya Sundar at BetterButter
195
4
0.0(0)
0

வெஜிடபிள் பால்ஸ் சிவப்பு கிரேவியில்

Feb-21-2018
Sowmya Sundar
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

வெஜிடபிள் பால்ஸ் சிவப்பு கிரேவியில் செய்முறை பற்றி

காய்கறிகளை வேக வைத்து உருண்டைகள் செய்து அதை காரட் ,சிவப்பு குடைமிளகாய் மற்றும் தக்காளி கொண்டு செய்த கிரேவியில் போட்டு செய்யும் வித்தியாசமான , சுவை மிகுந்த டிஷ் இது .நீங்களும் செய்து பாருங்கள்.

செய்முறை டாக்ஸ்

 • வெஜ்
 • மீடியம்
 • டின்னெர் பார்ட்டி
 • ஃப்யூஷன்
 • ஷாலோ ஃபிரை
 • ஸாட்டிங்
 • சைட் டிஷ்கள்
 • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

 1. வெஜிடபிள் பால்ஸ் செய்ய :
 2. சக்கரைவள்ளிகிழங்கு -1
 3. உருளைக்கிழங்கு-1
 4. காரட்-1
 5. பச்சை குடைமிளகாய்-1
 6. கார்ன் ஃப்ளோர் -2 டேபிள் ஸ்பூன்
 7. உப்பு
 8. மிளகாய் தூள்-1 டீஸ்பூன்
 9. மல்லி தூள்-1 டீஸ்பூன்
 10. கரம் மசாலா-1 /2 டீஸ்பூன்
 11. எலுமிச்சை சாறு-1 டீஸ்பூன்
 12. கிரேவி செய்ய :
 13. சிவப்பு நிற குடைமிளகாய் -2
 14. தக்காளி-2
 15. காரட் -1
 16. வெங்காயம்-1
 17. பச்சை மிளகாய்-1
 18. இஞ்சி ஒரு துண்டு
 19. பூண்டு-6 பல்
 20. மிளகாய் தூள்-1 டீஸ்பூன்
 21. மல்லி தூள்-1 டீஸ்பூன்
 22. கரம் மசாலா-1 டீஸ்பூன்
 23. மஞ்சள் தூள்-1/2 டீஸ்பூன்
 24. சர்க்கரை-1/2 டீஸ்பூன்
 25. உப்பு
 26. பட்டை -1
 27. கிராம்பு -2
 28. ஏலக்காய்-2
 29. வேர்க்கடலை-1 டீஸ்பூன்
 30. பால் -1/4 கப்
 31. முந்திரி பருப்பு-6
 32. கஸ்தூரி மேத்தி -1/2 டீஸ்பூன்

வழிமுறைகள்

 1. குக்கரில் உருளைக்கிழங்கு, சக்கரைவள்ளிகிழங்கு மற்றும் காரட் சேர்த்து வேகவைத்து எடுக்கவும்
 2. அதனுடன் பால்ஸ் செய்ய தேவையான அனைத்து பொருட்களையும் சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும்
 3. உருண்டைகளாக உருட்டி கடாட்சம் எண்ணெய் விட்டு காய்ந்ததும் ஷாலோ ஃப்ரை செய்து பொரித்து எடுக்கவும்.
 4. வெஜிடபிள் பால்ஸ் தயார்
 5. கடாயில் சிறிது எண்ணெய் விட்டு நறுக்கிய சிவப்பு நிற குடைமிளகாய் தக்காளி ,பூண்டு ,இஞ்சி ,வெங்காயம் பச்சை மிளகாய் மற்றும் காரட் சேர்த்து நன்கு வதக்கவும். வதங்கியதும் அடுப்பை அணைத்து விடவும்
 6. ஆறியதும் அதை மிக்ஸியில் போட்டு முந்திரி பருப்பு வேர்க்கடலை சேர்த்து அரைத்து கொள்ளவும்
 7. கடாயில் சிறிது எண்ணெய் விட்டு பட்டை கிராம்பு ஏலக்காய் தாளித்து அரைத்த விழுதை சேர்த்து அதனுடன் கிரேவி செய்ய தேவையான பொடி அனைத்தும் சேர்த்து எண்ணெய் பிரிந்து வரும் வரை நன்கு வதக்கவும்
 8. எண்ணெய் பிரிந்து வந்ததும் பாலை சேர்த்து அடுப்பை மிதமான தீயில் வைத்து கொதிக்க விடவும்
 9. பின்னர் அதில் கஸுரி மேத்தி இலைகளை சேர்த்து பொரித்த பாலஸ் சேர்த்து பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்