வீடு / சமையல் குறிப்பு / கத்திரிக்காய் பொள்ளிச்சது

Photo of Eggplant Pollichathu by IrsHanA M at BetterButter
333
8
0.0(0)
0

கத்திரிக்காய் பொள்ளிச்சது

Feb-21-2018
IrsHanA M
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
40 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

கத்திரிக்காய் பொள்ளிச்சது செய்முறை பற்றி

கத்திரிக்காய் மசாலா..

செய்முறை டாக்ஸ்

 • வெஜ்
 • மீடியம்
 • கேரளா
 • ஷாலோ ஃபிரை
 • ஃபிரையிங்
 • ஸாட்டிங்
 • சைட் டிஷ்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

 1. கத்திரிக்காய்-1 பெரியது
 2. வெங்காயம்-3
 3. சின்ன வெங்காயம்-10
 4. தக்காளி-1
 5. மல்லி இலை-சிறிதளவவு
 6. கரம் மசாலா-1/4 டீஸ்பூன்
 7. தே.பால்-1/2 கப்
 8. தே.எண்ணெய் -2-3 டீஸ்பூன்
 9. உப்பு-தேவைக்கு
 10. மேரினேட் செய்ய:
 11. மிளகாய் தூள்-1 1/2 டீஸ்பூன்
 12. மஞ்சள் தூள் -1/4 டீஸ்பூன்
 13. தே.எண்ணெய் -1/2 டீஸ்பூன்
 14. உப்பு,தண்ணீர்-தேவைக்கு
 15. அரைக்க:
 16. இஞ்சி-1 சிறிய துண்டு
 17. பூண்டு-3
 18. ப.மிளகாய்-1
 19. கறிவேப்பிலை-4
 20. சோம்பு-1/4 டீஸ்பூன்
 21. பெப்பர்-1/2 டீஸ்பூன்
 22. காஷ்மிரி மிளகாய் தூள்-1 1/2
 23. மஞ்சள் தூள்-1/4 டீஸ்பூன்
 24. தண்ணீர்-2 டீஸ்பூன்

வழிமுறைகள்

 1. கத்திரிக்காயை சுத்தம் செய்து மூன்று துண்டுகளாக வெட்டி மசாலா பொடிகள் சேர்த்து 15 நிமிடம் மேரினேட் செய்து வைத்து கொள்ளவும்.(மசாலா நன்றாக பிடிக்க ஒரு ஃபோர்க்கால் எல்லா பாகமும் குத்தி விடவும்)
 2. ஒரு கடாயில் எண்ணெய் விட்டு நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வசக்கவும்.
 3. அரைத்து வைத்துள்ள மசாலா பேஸ்டை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வசக்கவும்.
 4. இதில் புளிப்பில்லாதா தக்காளி மற்றும் உப்பு சேர்த்து நன்றாக வேக வைக்கவும்.
 5. இதனுடன் தேங்காய் பால் சேர்த்து கிளறி ,உப்பு மற்றும் காரத்தின் சுவையை சரி பார்த்து எண்ணெய் பிரிந்து வரும்போது மல்லி இலை,சிறிது கரம் மசாலா தூவி இறக்கவும்.
 6. ஒரு பேனில் தே.எண்ணெய் ஊற்றி மேரினேட் செய்து வைத்துள்ள கத்திரிக்காயை பொரித்து எடுக்கவும்.
 7. பொன்னிறமாகும் வரை வறுத்து எடுக்கவும்.
 8. வாழை இலையில்(அல்லது ஃபாயில் பேப்பரின் மேல் பட்டர் பேப்பர் வைத்து) ஒரு லேயர் மசாலா வைத்து அதன் மேல் பொரித்து வைத்துள்ள கத்திரிக்காய் வைத்து மீண்டும் ஒரு லேயர் மசாலா வைத்து பொதிந்து ஒரு பேனில் வாழை இலையின் நிறம் மாறும் வரை சுட்டு எடுக்கவும்.
 9. வெங்காயம்,எலுமிச்சை பழம்,மல்லி தூவி அலங்கரித்தால் சுவையான கத்திரிக்காய் பொள்ளிச்சது தயார்..!!
 10. பிரியாணி,வெரைட்டி ரைஸ்,சப்பாதி,தோசையுடன் சாப்பிடலாம்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்