Photo of Rice stuffed Capsicum by Wajithajasmine Raja mohamed sait at BetterButter
464
8
0.0(5)
0

Rice stuffed Capsicum

Feb-21-2018
Wajithajasmine Raja mohamed sait
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

Rice stuffed Capsicum செய்முறை பற்றி

ரைஸ் ஸ்டஃப்டு குடைமிளகாய்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • தினமும்
  • சௌத்இந்தியன்
  • பேக்கிங்
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. குடைமிளகாய் -2
  2. வெங்காயம் -1 பொடியாக நறுக்கியது
  3. தக்காளி - 1 பொடியாக நறுக்கியது
  4. பச்சை மிளகாய் 2
  5. உருளைக்கிழங்கு -1 பொடியாக நறுக்கியது
  6. இஞ்சி பூண்டு விழுது-1 தேக்கரண்டி
  7. மஞ்சள் தூள் -1/2 தேக்கரண்டி
  8. மிளகாய்தூள் -1/2 தேக்கரண்டி
  9. மல்லித்தூள் - 1 தேக்கரண்டி
  10. கரம்மசாலா -1 தேக்கரண்டி
  11. பட்டை-1
  12. ஏலக்காய் -3
  13. கிராம்பு -3
  14. பிரியாணி இலை -1
  15. உப்பு - தேவையான அளவு
  16. எண்ணெய் - தேவையான அளவு
  17. அரிசி - 1கப் வேக வைத்தது

வழிமுறைகள்

  1. தேவையான பொருட்கள்
  2. முதலில் குடைமிளகாயை பாதியாக வெட்டி உள் இருக்கும் விதைகளை எடுத்து விடவும்.மீதி பாதி மிளகாயை பொடியாக நறுக்கி வைக்கவும் .
  3. குடைமிளகாயை சிறிது நேரம் சூடிதண்ணீர் போட்டு 3-4 நிமிடங்கள் வைக்கவும் .
  4. அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை,கிராம்பு,ஏலக்காய் ,பிரியாணி இலை சேர்க்கவும் .பிறகு வெங்காயம் போட்டு வதக்கவும் .
  5. வெங்காயம் வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது ,தக்காளி ,பச்சை மிளகாய் ,மஞ்சள் தூள்,மிளகாய் தூள்,மல்லித்தூள் ,கரம்மசாலா, சேர்த்து வதக்கவும்.
  6. இப்பொழுது நறுக்கிய குடைமிளகாய்,நறுக்கிய உருளைக்கிழங்கு உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும் .
  7. பிறகு இதனுடன் சாதத்தை சேர்த்து நன்கு கிளறி விடவும் .( இதை அப்படியேவும் சாப்பிடலாம் ).
  8. மிக்சியில் ஒரு தக்காளியை உப்பு ,சிறிதளவு மிளகாய் தூள் சேர்த்து பியுரி போல அரைத்துக்கொள்ளவும் .
  9. குடைமிளகாயில் கிளறிய குடைமிளகாய் சாதத்தை ஸ்டஃப் செய்யவும் .
  10. ஒரு ட்ரேயில் அரைத்த தக்காளியை ஊற்றி ,சிறிதளவு குடைமிளகாய் மேல் ஊற்றி 350C 20 நிமிடங்கள் ஓவனில் பேக் செய்யவும் .
  11. இப்பொழுது சுவையான ரைஸ் ஸ்டஃப்டு குடைமிளகாய் தயார்.இறுதியாக சீஸ் மேல் தூவி பறிமாறவும் .

மதிப்பீடு (5)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
BetterButter Editorial
Feb-22-2018
BetterButter Editorial   Feb-22-2018

Hi Wajithajasmine, collage images are not allowed, kindly share a clear and single image of this dish. To edit the image, please go to the recipe image and click on the 'pen icon' on the right top side and edit the image. Thanks!

Lalitha Venkat
Feb-22-2018
Lalitha Venkat   Feb-22-2018

Yummy

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்