BetterButter பயன்பாடு

சமையல், உணவு சமூகம் மற்றும் சமையலறைப் பொருட்கள்

(8,719)
பதிவிறக்கம் செய்திட

உங்கள் சமையல் குறிப்புகளைப் பதிவேற்றவும் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்

வீடு / சமையல் குறிப்பு / French onion soup

Photo of French onion soup by Asiya Omar at BetterButter
0
6
4(2)
0

French onion soup

Feb-22-2018
Asiya Omar
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
8 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • శాఖాహారం
  • మీడియం/మధ్యస్థ
  • రాత్రి విందు
  • ఫ్రెంచి
  • చిన్న మంట పై ఉడికించటం
  • సూపులు
  • పౌష్టికాహారం

தேவையான பொருட்கள் பரிமாறும்: 8

  1. வெங்காயம் பொடியாக நறுக்கியது -1/2 கிலோ
  2. வெண்ணெய், எண்ணெய் -1+1 மேஜைக்கரண்டி
  3. ப்ரவுன் சுகர்- 2 தேக்கரண்டி
  4. மைதா அல்லது கோதுமை மாவு -2 மேஜைக்கரண்டி
  5. பொடித்த மிளகு ,உப்பு- சுவைக்கேற்ப
  6. சோயா சாஸ்,வினிகர் -தலா 2 தேக்கரண்டி
  7. அலங்கரிக்க - நறுக்கிய வெங்காயத்தாள்.

வழிமுறைகள்

  1. பெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கியோ அல்லது சாப்பரில் போட்டும் சாப் செய்து எடுக்கலாம்.
  2. ஒரு பெரிய அடிகனமான பாத்திரத்தில் எண்ணெய்,வெண்ணெய் போட்டு சூடு செய்து நறுக்கிய வெங்காயம், ப்ரவுன் சுகர் சேர்த்து சிம்மில் வைத்து பொன்னிறமாக சிவந்து வரவேண்டும்.20 நிமிடம் ஆகும்.
  3. வதங்கியவுடன் மைதா மாவு சேர்த்து பிரட்டவும்.சுமார் ஒன்னரை லிட்டர் தண்ணீர் சேர்க்கவும்.மேகி அல்லது நார் சூப் கியூப் 1-2 சேர்க்கலாம்.சூப் கியூப் சேர்த்தால் உப்பு சேர்க்க வேண்டாம்.
  4. நன்றாக கொதிக்கட்டும்.உப்பு,மிளகுத்தூள் சேர்க்கவும்.உங்கள் தேவைக்கு கொதிநீர் சேர்க்கவும்.
  5. புளிப்பு சுவைக்கு வினிகர்,சோயா சாஸ் சேர்க்கவும்.நறுக்கிய வெங்காயத்தாள் அலங்கரித்துப் பரிமாறவும்.
  6. தயார் ஆன சூப்பை எலெக்ட்ரிக் குக்கரில் ஊற்றி சூடாக வைக்கவும் .விருந்தினர்களுக்கு பரிமாற சூடாக இருக்கும்.
  7. இதோ ப்ரென்ச் ஆனியன் சூப் தயார்.பவுலில் எடுத்துக் குடிக்கவும் அல்லது பரிமாறவும்.

மதிப்பீடு (2)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Pushpa Taroor
Feb-22-2018
Pushpa Taroor   Feb-22-2018

Good

Ahamed Nachiya
Feb-22-2018
Ahamed Nachiya   Feb-22-2018

அருமையான சூப்

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்