Photo of Mushroom 65 by Wajithajasmine Raja mohamed sait at BetterButter
1101
9
0.0(1)
0

Mushroom 65

Feb-22-2018
Wajithajasmine Raja mohamed sait
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • சௌத்இந்தியன்
  • ஃபிரையிங்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. காளான் -10-12 பாதியாக நறுக்கியது
  2. தயிர்-1/2 கப்
  3. இஞ்சி பூண்டு விழுது- 1 தேக்கரண்டி
  4. அரசி மாவு - 2 தேக்கரண்டி
  5. சோளமாவு -2 தேக்கரண்டி
  6. மிளகாய் தூள் - 1 1/2 தேக்கரண்டி
  7. மல்லித்தூள் -1 தேக்கரண்டி
  8. கரம்மசாலா தூள்- 1 தேக்கரண்டி
  9. உப்பு - தேவையான அளவு
  10. எண்ணெய் - தேவையான அளவு
  11. முந்திரி -6
  12. கருவேப்பிலை -சிறிதளவு
  13. பச்சை மிளகாய் -2

வழிமுறைகள்

  1. தேவையான பொருட்கள் :
  2. முதலில் காளானை கழுவி பாதியாக வெட்டிக்கொள்ளவும்.
  3. வெட்டிய காளானுடன் இஞ்சி பூண்டு விழுது , மிளகாய் தூள் , மல்லித்தூள் , கரம்மசாலா தூள், அரிசி மாவு,சோளமாவு,உப்பு சேர்த்து கிளறி ,தண்ணீர் விடாமல்,தயிர் விட்டு கலந்து 30 நிமிடங்கள் ஊற வைக்கவும் .
  4. அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் ஊறிய காளான்களை போட்டு பொரித்து எடுக்கவும் .
  5. இறுதியாக முந்திரி ,கருவேப்பிலை ,பச்சை மிளகாய் சேர்த்து பொரித்து காளானுடன் சேர்த்து பறிமாறவும் ..
  6. சுவையான மொறுமொறுப்பான காளான் 65 தயார்.
  7. இதனை சாம்பார் ,ரசம் சாதத்துடன் பக்க உணவாக அல்லது மாலைவேளையில் தேனீருடன் அப்படியே சாப்பிடலாம் .

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Lalitha Venkat
Feb-22-2018
Lalitha Venkat   Feb-22-2018

Yummy

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்