வீடு / சமையல் குறிப்பு / எள் வெண்டைக்காய் சப்ஜி

Photo of Sesame Okra Sabji by Ayesha Ziana at BetterButter
243
5
0.0(0)
0

எள் வெண்டைக்காய் சப்ஜி

Feb-22-2018
Ayesha Ziana
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

எள் வெண்டைக்காய் சப்ஜி செய்முறை பற்றி

வெண்டைக்காய் மற்றும் அரைத்த எள் மசாலாபொடி வைத்து செய்த சூப்பரான சப்ஜி.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • ஸாட்டிங்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. வெண்டைக்காய் 10
  2. எண்ணெய் தேவைக்கு
  3. கடுகு 1 ஸ்பூன்
  4. உடைத்த உளுந்து 1 ஸ்பூன்
  5. பூண்டு 3 பல்
  6. உப்பு தேவைக்கு
  7. கறிவேப்பிலை 1 கொத்து
  8. மிளகாய் தூள் 1 ஸ்பூன் அல்லது தேவைக்கு
  9. மஞ்சள் தூள் 1/4 ஸ்பூன்
  10. தேங்காய் துருவல் 1 டேபிள் ஸ்பூன்
  11. வெல்லம் ஒரு சிறிய துண்டு
  12. வறுத்துப் பொடிக்க: எள் 1 ஸ்பூன்
  13. சீரகம் 1 ஸ்பூன்
  14. பச்சை நிலக்கடலை ஒரு கையளவு

வழிமுறைகள்

  1. வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்து, நறுக்கிய பூண்டு, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
  2. வெண்டைக்காயைச் சாய்வான, சற்று பெரிய துண்டுகளாக நறுக்கி, அதையும் வாணலியில் சேர்த்து லேசாக கிளறவும்.
  3. பின்னர் மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கிளறி, மூடி வைத்து சிம்மில் வேக விடவும். இடையிடையே கிளறவும். தண்ணீர் ஊற்றவே கூடாது. தேவைப்பட்டால் மேலும் சிறிது எண்ணெய் மட்டுமே ஊற்றவும்.
  4. சில நிமிடங்கள் கழித்து, தேங்காய் துருவல் மற்றும் வெல்லம் சேர்த்து கிளறி, மீண்டும் மூடி வைத்து சிம்மில் வேக விடவும்.
  5. மற்றொரு சிறிய பேனில் வறுத்து அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை நன்றாக வறுத்து மிக்ஸியில் பொடித்துக் கொள்ளவும்.
  6. வெண்டைக்காய் நன்கு வெந்ததும், பொடித்து வைத்த பொடியைத் தேவைக்கேற்ப சேர்த்துக் கொள்ளவும்.
  7. சூப்பரான எள் வெண்டைக்காய் சப்ஜி தயார். இதை சாதத்திற்கு சைட் டிஷ்ஷாக பரிமாறலாம். காரம் குறைவாக இருப்பதால் குழந்தைகளுக்கும் மிகவும் பிடிக்கும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்