வீடு / சமையல் குறிப்பு / லோடட் சர்க்கரைவள்ளி கிழங்கு

Photo of Loaded Sweet Potatoes by Priyadharshini Selvam at BetterButter
347
5
0.0(0)
0

லோடட் சர்க்கரைவள்ளி கிழங்கு

Feb-22-2018
Priyadharshini Selvam
1 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

லோடட் சர்க்கரைவள்ளி கிழங்கு செய்முறை பற்றி

சர்க்கரைவள்ளி கிழங்கை வைத்து செய்ய கூடிய ஒரு வித்தியாசமான ரெசிபி இது. சாலட் ஆகவும் சாப்பிடலாம். காய்கறிகள் நிறைந்துள்ள பில்லிங் ருசியை கூட்டி, சீஸ் டாப்பிங் மனதை உருகச்செய்யும்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • பேக்கிங்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. சர்க்கரைவள்ளி கிழங்கு 1
  2. நறுக்கிய வெங்காயம் 1/4 கப்
  3. நறுக்கிய தக்காளி 1/4 கப்
  4. நறுக்கிய குடை மிளகாய் 1/4 கப்
  5. நறுக்கிய வெள்ளரிக்காய் 1/4 கப்
  6. நறுக்கிய பூண்டு 1 மேஜைக்கரண்டி
  7. கிரீம் சீஸ் 2 மேஜைக்கரண்டி
  8. மையோனைஸ் 2 மேஜைக்கரண்டி
  9. சில்லி பிளேக்ஸ் 1 தேக்கரண்டி
  10. மிக்ஸ்ட் ஹெர்ப்ஸ் 1 தேக்கரண்டி
  11. பிங்க் உப்பு 1/4 தேக்கரண்டி
  12. மிளகுத்தூள் 1/2 தேக்கரண்டி
  13. மொசரல்லா சீஸ் 1/2 கப்
  14. கொத்துமல்லி இலை சிறிதளவு
  15. வெண்ணைய் தடவ தேவையான அளவு

வழிமுறைகள்

  1. அவனை 180℃ முற்சூடு செய்யவும். ஒரு சர்க்கரைவள்ளி கிழங்கை நன்கு கழுவி இரண்டாக வெட்டி வெண்ணெய் தடவி வைக்கவும்.
  2. அதை பாயில் பரப்பிய பேக்கிங் ட்ரேய்யின் மேல் வைத்து 180℃ இல் 15 நிமிடம் அவனில் வைத்து வேக வைக்கவும்.
  3. ஒரு கிண்ணத்தில் கிரீம் சீஸ், 1 தேக்கரண்டி சில்லி பிளக்ஸ், 1 தேக்கரண்டி மிக்ஸட் ஹேர்ப்ஸ் , 1/4 தேக்கரண்டி பிங்க் உப்பு சேர்த்து கலக்கவும்.
  4. இந்த கலவையுடன் 2 மேஜைக்கரண்டி மையோனைஸ் சேர்த்து கலக்கவும்.
  5. இதனுடன் பொடியாக நறுக்கிய காய்கறிகள் , மிளகுத்தூள் சேர்த்து கலக்கவும்.
  6. வெந்த கிழங்கை எடுத்து நடுவில் உள்ள சதை பகுதியை ஸ்பூனில் எடுத்து மேலே உள்ள கலவையில் சேர்க்கவும். மீதமுள்ள சதை பகுதியை அப்டியே விட்டுவிடவும்.
  7. இதனுள் காய்கறி கலவையை வைத்து நன்கு பில்லிங் செய்யவும்
  8. இதன் மேல் துருவிய சீஸ் தூவி அதன் மேல் சிறிது சில்லி பிளேக்ஸ், மிக்ஸட் ஹேர்ப்ஸ், கொத்தமல்லி இலை தூவவும்
  9. 180℃ இல் 10 நிமிடம் அல்லது சீஸ் உருகி நன்கு படரும் வரை இதை அவனில் வைத்து எடுக்கவும்
  10. சூடான சுவையான லோடட் சர்க்கரைவள்ளி கிழங்கு தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்