வீடு / சமையல் குறிப்பு / ஆலு ராஜ்மா கிரேவி

Photo of Aloo rajma gravy by Krishnasamy Vidya Valli at BetterButter
280
4
0.0(0)
0

ஆலு ராஜ்மா கிரேவி

Feb-23-2018
Krishnasamy Vidya Valli
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

ஆலு ராஜ்மா கிரேவி செய்முறை பற்றி

ராஜ்மா வட இந்தியாவில் அதிகம் பயன்படுத்துவார்கள். ராஜ்மா சத்து அதிகம் நிறைந்தது. உருளைக்கிழங்கையும் ராஜ்மாவையும் வைத்து செய்யும் சைட்டிஷ் வெரைட்டி இது. ராஜ்மா ஊறவைக்கும் நேரம் சேர்க்கப்படவில்லை.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டின்னெர் பார்ட்டி
  • நார்த் இந்தியன்
  • பிரெஷர் குக்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. உருளைக்கிழங்கு -2
  2. வெங்காயம் -3
  3. தக்காளி -3
  4. ராஜ்மா -3 மேஜைக்கரண்டி
  5. உப்பு -1 தேக்கரண்டி
  6. கொத்தமல்லி இலை -பொடியாக நறுக்கியது -2 தேக்கரண்டி
  7. பொடிகள்
  8. மஞ்சள் பொடி -1/2 தேக்கரண்டி
  9. காஷ்மீர் சில்லி பவுடர் - 1தேக்கரண்டி
  10. கரம் மசாலா -1 தேக்கரண்டி
  11. தனியா பொடி -3/4 தேக்கரண்டி
  12. சீரகப்பொடி -1/2 தேக்கரண்டி
  13. ஆம்சூர் பவுடர் -1/4 தேக்கரண்டி
  14. தாளிக்க
  15. எண்ணெய் -2 தேக்கரண்டி
  16. சீரகம் -1 தேக்கரண்டி
  17. இஞ்சி பூண்டு பேஸ்ட் -1 தேக்கரண்டி
  18. ஏலக்காய் கிராம்பு -தலா 2
  19. பட்டை -1 சிறிய துண்டு

வழிமுறைகள்

  1. ராஜ்மாவை ஆறு மணி நேரம் ஊறவைத்து குக்கரில் வேக வைத்துக்கொள்ளவும். உருளைக் கிழங்கையும் வேகவைத்து தோல் உரித்துக்கொள்ளவும்
  2. வெங்காயம் தக்காளியை நறுக்கிக்கொள்ளவும்
  3. கடாயில் தாளிக்க கொடுத்தவற்றை தாளித்து வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
  4. பச்ச வாசனை போனவுடன் தக்காளியை சேர்த்து வதக்கவும்
  5. உப்பு மற்றும் எல்லா பொடிகளும் சேர்த்து கிளறவும்
  6. வேகவைத்த உருளைக்கிழங்கு ராஜ்மாவை சேர்க்கவும்
  7. கிரேவி கெட்டியானவுடன் இறக்கவும்
  8. கொத்தமல்லி இலையை தூவி பறிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்