வீடு / சமையல் குறிப்பு / வெண்டைக்காய் பால் கறி

Photo of Okra-coconutmilk curry by IrsHanA M at BetterButter
52
6
0.0(0)
0

வெண்டைக்காய் பால் கறி

Feb-23-2018
IrsHanA M
8 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

வெண்டைக்காய் பால் கறி செய்முறை பற்றி

lady's finger in mild spice coconut milk gravy..

செய்முறை டாக்ஸ்

 • வெஜ்
 • ஈஸி
 • தினமும்
 • கேரளா
 • பாய்ளிங்
 • ஸாட்டிங்
 • சைட் டிஷ்கள்
 • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

 1. வெண்டைக்காய்-15 எண்ணம்
 2. வெங்காயம்-1
 3. இஞ்சி-1 துண்டு
 4. பச்சைமிளகு-3 நீளவாக்கி்ல் வெட்டியது
 5. மஞ்சள் பொடி -1/2 டீஸ்பூன்
 6. வத்தல்பொடி-1டீஸ்பூன்
 7. தேங்காய்ப்பால்-1/2 கப் கெட்டியானது
 8. எலுமிச்சை சாறு-1டீஸ்பூன்
 9. கறிவேப்பிலை-1கொத்து
 10. தே.எண்ணெய்-2 மேஜைக்கரண்டி
 11. தாளிக்க:
 12. கடுகு-1/2டீஸ்பூன்
 13. சின்னவெங்காயம்-3எண்ணம்
 14. வெந்தயம்-1/2டீஸ்பூன்
 15. கறிவேப்பிலை-1
 16. வத்தல் மிளகு-2
 17. தே.எண்ணெய்- 1டீஸ்பூன்

வழிமுறைகள்

 1. வெண்டைக்காயை சுத்தம் செய்து ஈரம் போக சுத்தமான வெள்ளைத்துணியில் பரத்தி காயவைத்து அதனை நீளவாக்கில் வெட்டிக்கொள்வும்.
 2. கடாயில் 2டீஸபூன் எண்ணெய்விட்டு வெண்டைக்காயை முக்கால் பாகம் வேகும்வரை பொரித்து எடுக்கவும்.
 3. அதே எண்ணெயில் நீளவாக்கல் வெட்டிய வெங்காயம் இஞ்சி பச்சைமிளகாயை போட்டு வதக்கவும்
 4. அதனுடன் கறிவேப்பிலை பொரித்த வெண்டைக்காய் மஞ்சள்பொடி வத்தல் பொடி போட்டு பச்சை வாசனை போகும் வரை கிளறவும்
 5. அதனுடன் இரண்டாம் தேங்காய்ப்பால் ஊற்றி தேவையான உப்புபோட்டு மூடி மிதமான சூட்டில் 4-5நிமிடங்கள் வேகவைக்கவும்
 6. குழம்பு கெட்டிப்பதம் வந்ததும் எலுமிச்சை சாறு ஊற்றி உப்பு சரி பார்த்து கெட்டியான தேங்காய்பால் ஊற்றி கிளறி அடுப்பை அணைத்துவிடவும்
 7. வேறொரு கடயில் தாளிப்பு செய்து அதனை குழம்பில் கொட்டி மூடி வைக்கவும் பத்து நிமிடம் கழித்து பறிமாறவும்.
 8. அருமையான தேங்காய் பால் வெண்டைக்காய் குழம்பு தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்