Photo of Mushroom Pulao by Wajithajasmine Raja mohamed sait at BetterButter
385
7
0.0(2)
0

Mushroom Pulao

Feb-23-2018
Wajithajasmine Raja mohamed sait
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • சௌத்இந்தியன்
  • பாய்ளிங்
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. காளான் -10-12 நறுக்கியது
  2. பாஸ்மதி அரிசி -1கப்
  3. வெங்காயம் -1 நறுக்கியது
  4. தக்காளி -1 நறுக்கியது ( விரும்பினால் சேர்க்கலாம்)
  5. பச்சைமிளகாய்-2
  6. இஞ்சி பூண்டு விழுது- தேக்கரண்டி
  7. மஞ்சள் தூள் சிறிதளவு
  8. மிளகாய் தூள்-1 தேக்கரண்டி
  9. கரம்மசாலா 1/2 தேக்கரண்டி
  10. பட்டை-1
  11. ஏலக்காய் -3
  12. கிராம்பு -4
  13. பிரியாணி இலை-2
  14. சோம்பு -1/2 தேக்கரண்டி
  15. உப்பு -தேவையான அளவு
  16. நெய்-தேவையான அளவு

வழிமுறைகள்

  1. தேவையான பொருட்கள்
  2. முதலில் பாஸ்மதி அரிசியை கழுவி 20 நிமிடங்கள் ஊற வைக்கவும் .
  3. அடுப்பில் பாத்திரத்தை வைத்து நெய் ஊற்றி சோம்பு,பட்டை,கிராம்பு ,ஏலக்காய் ,பிரியாணி இலை சேர்த்து வதக்கவும் .
  4. பின்பு நறுக்கிய வெங்காயம் ,இஞ்சி பூண்டு விழுது,சேர்த்து வதக்கியதும் தக்காளியை சேர்க்கவும் .
  5. தக்காளி நன்கு வதங்கியதும் நறுக்கிவைத்துள்ள காளான்,மிளகாய் தூள் ,மஞ்சள் தூள்,கரம்மசாலா சேர்த்து வதக்கவும் .
  6. பிறகு ஊற வைத்த அரிசியை தண்ணீர் நன்கு வடித்து சேர்க்கவும் .ஒரு முறை கிளறி விட்டு தேவையான அளவு தண்ணீர் ,உப்பு சேர்த்து வேக வைக்கவம்சம்.
  7. தண்ணீர் நன்கு வற்றி அரிசி முக்கால் பதம் வெந்ததும் தோசை தவாவை அடுப்பில் வைத்து அதன் மேல் புலாவ் செய்த பாத்திரத்தை வைத்து அலுமினியம் பாயில் அல்லது மூடியால் மூடி 7-10 நிமிடங்கள் தம்மில் வக்கவும்.
  8. தம் முடிந்ததும் அடுப்பில் இருந்து இறக்கி லேசாக கிளறி விடவும்.
  9. இப்பொழுது சுவையான காளான் புலாவ் தயார் .தயிர் வெங்காயம் பச்சடியுடன் பரிமாறவும்.

மதிப்பீடு (2)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Rajamohamed Sait
Feb-23-2018
Rajamohamed Sait   Feb-23-2018

Super

Priya Mohan
Feb-23-2018
Priya Mohan   Feb-23-2018

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்