வீடு / சமையல் குறிப்பு / பாகற்காய் தயிர் பச்சடி

Photo of Bitter gourd curd raitha by Ramya Kannan at BetterButter
303
4
0.0(0)
0

பாகற்காய் தயிர் பச்சடி

Feb-23-2018
Ramya Kannan
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
8 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

பாகற்காய் தயிர் பச்சடி செய்முறை பற்றி

கசப்பு இல்லாத பாகற்காய் பச்சடி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • சௌத்இந்தியன்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

  1. பாகற்காய் -1(பெரியது )
  2. வெங்காயம் -1(பெரியது)
  3. மிளகாய் தூள்- ,1 டீஸ்பூன்
  4. சர்க்கரை - 1/2 தேக்கரண்டி
  5. எண்ணெய்- 2 tablespoon
  6. கடுகு உளுத்தம்பருப்பு- சிறிதளவு
  7. தயிர் - 1/4 ltr
  8. கொத்தமல்லி இலை- சிறிது
  9. அரைக்க:
  10. தேங்காய் - 2 டேபிள் ஸ்பூன்
  11. ஜீரகம் - சிறிது
  12. சின்ன வெங்காயம் - 4
  13. இஞ்சி - சிறிய துண்டு

வழிமுறைகள்

  1. முதலில் பாகற்காயை பொடியாக நறுக்கி உப்பு சேர்த்து 30 நிமிடம் வைக்கவும்.பின்னர் அதில் விட்டிருக்கும் நீரை நன்றாக பிழிந்து விட்டு பின் 3 முதல் 4 முறை நன்றாக நீரில் அலசி வைத்துக்கொள்ளவும் .இப்படி செய்வதன் மூலம் கசப்பு தன்மை குறைந்து விடும்.
  2. பின்னர் வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு தாளித்து பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்
  3. பின்னர் பாகற்காயை சேர்த்து வதக்கவும்.
  4. நன்றாக வதங்கியவுடன் உப்பு மிளகாய் தூள் மற்றும் சர்க்கரை சேர்த்து நன்றாக வதக்கி இறக்கி ஆற விடவும்
  5. அரைக்க கொடுத்த பொருட்களை அரைத்து தயிருடன் கலக்கவும்
  6. ஆறியவுடன் பாகற்காய் கலவையும் தயிருடன் சேர்த்து கலந்து கொத்தமல்லி இலை சேர்த்து பரிமாறவும்.
  7. சுவையான கசப்பு இல்லாத பாகற்காய் தயிர் பச்சடி தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்