Photo of Hyacinth beans Kheer by Ramya Kannan at BetterButter
453
3
0.0(1)
0

Hyacinth beans Kheer

Feb-23-2018
Ramya Kannan
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
12 நிமிடங்கள்
சமையல் நேரம்
8 மக்கள்
பரிமாறவும்

Hyacinth beans Kheer செய்முறை பற்றி

How to make hyacinth bean gheer

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • கர்நாடகா
  • டெஸர்ட்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 8

  1. பச்சை மொச்சை - 1 கப்
  2. வெல்லம் - 150 gms
  3. தேங்காய் துருவல்- 3 டேபிள் ஸ்பூன்
  4. கசகசா - 2 டீஸ்பூன்
  5. ஏலக்காய் - 2
  6. சுக்கு பொடி- 1 சிட்டிகை
  7. நெய் - 2 ஸ்பூன்
  8. முந்திரி -6
  9. காய்ந்த திராட்சை -5

வழிமுறைகள்

  1. பச்சை மொச்சையை நீரில் ஒரு மணி நேரம் ஊற வைத்து அதன் மேல் தோலை உரித்து உள்ளிருக்கும் வெண்மை பகுதியை பயன்படுத்தி செய்தால் சுவையாக இருக்கும்.
  2. குக்கரில் 2 விசில் வைத்து வேக வைத்து கொள்ளவும்
  3. ஒரு வாணலியில் வெல்லம் போட்டு நீர் ஊற்றி நன்றாக கொதிக்க வைக்கவும்
  4. அதில் சுக்கு பொடி ஒரு சிட்டிகை சேர்க்கவும்
  5. பின்னர் வேக வைத்த மொச்சை சேர்த்து கொதிக்க விடவும்
  6. மிக்ஸியில் தேங்காய் கசகசா ஏலக்காய் சேர்த்து சிறிது நீர் சேர்த்து நன்றாக அரைத்து கொள்ளவும்.
  7. அரைத்த கலவையும் வாணலியில் சேர்த்து எல்லாம் நன்றாக சேர்ந்து கொதிக்க வேண்டும்
  8. கொஞ்சம் கெட்டியானதும் இறக்கி விடவும்....
  9. நெய்யில் முந்திரி திராட்சை வறுத்து பாயசத்தில் சேர்த்து பரிமாறவும்
  10. வித்தியாசமான சுவையான பச்சை மொச்சை பாயசம் தயார்
  11. கர்நாடக மக்களின் பாரம்பரிய உணவுகளில் இந்த பாயசமும் ஒன்று.

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Pushpa Taroor
Feb-24-2018
Pushpa Taroor   Feb-24-2018

Good

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்