வீடு / சமையல் குறிப்பு / ஸ்டப்டு வெண்டைகாய்

Photo of Stuffed lady's finger by Krishnasamy Vidya Valli at BetterButter
172
4
0.0(0)
0

ஸ்டப்டு வெண்டைகாய்

Feb-23-2018
Krishnasamy Vidya Valli
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

ஸ்டப்டு வெண்டைகாய் செய்முறை பற்றி

வெண்டைகாயில் மசாலா ஸ்டப் செய்து வதக்கும் டிரை சப்ஜி வகை இது. சப்பாத்தி/நாண்/ரைஸ் இப்படி எதற்கும் தொட்டுக்கொள்ளலாம். நோ ஆனியன் நோ கார்லிக் வகையை சேர்ந்த்து.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டின்னெர் பார்ட்டி
  • நார்த் இந்தியன்
  • சைட் டிஷ்கள்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. பிஞ்சு பால் வெண்டைக்காய் -1 விரல் அளவு நீளம் உள்ளது 15 முதல் 20
  2. வறுத்து திரிக்க
  3. கடலைப்பருப்பு -1 தேக்கரண்டி
  4. உளுத்தம் பருப்பு -1 தேக்கரண்டி
  5. கொத்தமல்லி விதை -2 தேக்கரண்டி
  6. தேங்காய் துருவல் -1 தேக்கரண்டி
  7. எள்ளு -1/2 தேக்கரண்டி
  8. வேர்கடலை -1 தேக்கரண்டி
  9. பட்டை -1 சிறிய துண்டு
  10. ஏலக்காய் கிராம்பு -தலா 2
  11. மிளகாய் வத்தல் -4
  12. கட்டி பெருங்காயம் -1 சிறிய துண்டு
  13. சீரகம்-2 சிட்டிகை
  14. மிளகு -6 முதல் 8
  15. எண்ணெய் -2 டிராப்ஸ்
  16. உப்பு -1/2 தேக்கரண்டி
  17. மஞ்சள் பொடி -1/4 தேக்கரண்டி
  18. தாளிக்க
  19. எண்ணெய் -2 தேக்கரண்டி
  20. கடுகு -1/2 தேக்கரண்டி
  21. உளுத்தம் பருப்பு -1/2 தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. ஒரு விரல் நீளமுள்ள பிஞ்சு பால் வெண்டைக்காயை எடுத்துக்கொள்ளவும்
  2. நன்றாக அலம்பி கொண்டை பகுதியையும் காம்பு பகுதியையும் நறுக்கி துணியில் ஈரம் போக துடைத்து பத்து நிமிடங்கள் காய விடவும்
  3. நான்காக வெண்டைகாயை கீறிக்கொள்ளவும்
  4. வறுத்து திரிக்க கொடுத்தவற்றை (உப்பு மஞ்சள் பொடி தவிர) வறுத்துக்கொள்ளவும். அதனுடன் உப்பு மஞ்சள் பொடி சேர்த்து மிக்ஸியில் கரகரப்பாக திரிக்கவும்
  5. இந்த பொடியை கீறிய வெண்டைக்காயில் ஸ்டப் செய்து கொள்ளவும்
  6. கடாயில் தாளிக்க கொடுத்தவற்றை தாளித்து ஸ்டப் செய்த வெண்டைக்காய்களை அடுக்கி இரண்டு நிமிடங்கள் கழித்து திருப்பி கொடுக்கவும்.
  7. பொடி மீதம் இருந்தால் பாதி வதங்கியதும் மேலே தூவிக்கொள்ளவும்.
  8. நல்ல முறுமுறு என்று ஆனதும் அடுப்பை அணைத்து விட்டு (விருப்பப்பட்டால் கொத்தமல்லி இலையை தூவி எலுமிச்சை சாறு கலந்து) பறிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்