செட்டிநாடு மிளகு கோழிக்கறி சமையல் குறிப்பு | Chettinad Pepper Chicken Recipe in Tamil

எழுதியவர் Chettinad Sarees  |  7th Mar 2016  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
  • Photo of Chettinad Pepper Chicken Recipe by Chettinad Sarees at BetterButter
செட்டிநாடு மிளகு கோழிக்கறி சமையல் குறிப்புChettinad Sarees
  • ஆயத்த நேரம்

    15

    நிமிடங்கள்
  • சமைக்கும் நேரம்

    30

    நிமிடங்கள்
  • பரிமாறும் அளவு

    4

    மக்கள்

56

0

செட்டிநாடு மிளகு கோழிக்கறி சமையல் குறிப்பு recipe

செட்டிநாடு மிளகு கோழிக்கறி சமையல் குறிப்பு தேவையான பொருட்கள் ( Ingredients to make Chettinad Pepper Chicken Recipe in Tamil )

  • வெங்காயம் -1, பெரியது, பொடியாக நறுக்கப்பட்டது
  • சிவப்பு மிளகாய் தூள் - 1தேக்கரண்டி
  • தக்காளி -1, விதை நீக்கப்பட்டு நன்றாகச் சதுரமாக வெட்டப்பட்டது
  • மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
  • பச்சை மிளகாய் - 2, நன்றாக நறுக்கப்பட்டது
  • இஞ்சி பூண்டு - 1 தேக்கரண்டி
  • மல்லித்தூள் - 1 தேக்கரண்டி
  • சீரகத்தூள் - 1 தேக்கரண்டி
  • தாளிப்புக்கு: எண்ணெய் - 1 தேக்கரண்டி கடுகு - 1 தேக்கரண்டி சீரகம் - 2 தேக்கரண்டி ஏலக்காய் - 1, உடைத்த இலவங்கப்பட்டை -1, கிராம்பு -4, பே இலை -1, நசுக்கப்பட்டது
  • எண்ணெய் - 2 தேக்கரண்டி
  • உப்பு - சுவைக்கேற்றபடி
  • மிளகு - 10, நசுக்கப்பட்டு பொடியாக்கப்பட்டது
  • கோழி - 1/2 கிலோ, இறைச்சி துண்டாக்கப்படுகிறது

செட்டிநாடு மிளகு கோழிக்கறி சமையல் குறிப்பு செய்வது எப்படி | How to make Chettinad Pepper Chicken Recipe in Tamil

  1. சிக்கனைத் தயார் செய்து எடுத்து வைத்துக்கொள்ளவும். ஒரு கனமான அடிப்பாகமுள்ள நான்-ஸ்டிக் பாத்திரத்தில், எண்ணெயை சூடுபடுத்தி 'தாளிப்புக்கு' கீழ் உள்ள பொருள்களைச் சேர்க்கவும். மசாலாவிலிருந்து நறுமணம் வெளிவரும்போது வெங்காய் சேர்த்து பொன்னிறமாகும்வரை வதக்கவும்.
  2. இஞ்சி-பூண்டு சாந்து, பச்சை மிளகாய், மஞ்சள் தூள் சேர்த்து ஒரு நிமிடத்திற்கு வதக்கவும். தக்காளி, சிவப்பு மிளகாய், மல்லித்தூள், சீரகப்பொடி சேர்க்கவும். பிறகு உப்பு சேர்க்கவும். சிறு தீயில் 8-10 நிமிடங்கள் எண்ணெய் பிரியத் துவங்கும்வரை வதக்கிக்கொண்டே இருக்கவும்.
  3. சிக்கனைச் சேர்த்து மசாலாக்களோடு கலக்கவும். சும்மா தண்ணீரை (2 தேக்கரண்டி) தெளிக்கவும். அப்போதுதான் அது ஒட்டாது. கோழி தண்ணீர் விடும், அதுவே கோழி வேகுவதற்குப் போதுமானது. கோழியை 5-10 நிமிடங்கள் வேகவைக்கவும்.
  4. மிளகை ஒரு கைக் குழவியால் நசுக்கிக்கொள்ளவும். இப்போது திறந்து சிக்கன் சாசின் பதத்தைச் சரிபார்க்கவும்.
  5. அரைத்து வைக்கப்பட்டுள்ள மிளகுத் தூளைச் சேர்த்து சிக்கன் சாசுடன் மிளகு உலர்ந்துபோகும்வரை வறுக்கவும்.
  6. புதிய கொத்துமல்லி இலைகளைக் கொண்டு அலங்கரித்துப் பரிமாறவும்.

எனது டிப்:

உங்கள் சுவைக்கு ஏற்றபடி உப்பு காரத்தை சரிசெய்துகொள்க. கோழி சாறை உலர்த்திக்கொள்ளலாம் அல்லது அந்தப் பதத்திற்கு நிறுத்திக்கொள்ளலாம், சப்பாத்திக்கு நேர்த்தியாக இருக்கும். சிக்கனை 1 விசிலுக்கு பிரஷர் குக்கரில் வேகவைத்து அதன்பிறகு மசாலாவைச் சேர்க்கலாம். நிறத்திற்கு, சிவப்பு மிளகாய்த் தூள் சேர்ப்பதைத் தவிர்த்து கூடுதலாக மிளகுத் தூளைச் சேர்க்கலாம்.

Reviews for Chettinad Pepper Chicken Recipe in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.