வீடு / சமையல் குறிப்பு / பூண்டு  முருங்கைக்காய் கார குழம்பு

Photo of Poondu Murungaikai Kara Kuzhambu by Surya Rajan at BetterButter
418
3
0.0(0)
0

பூண்டு  முருங்கைக்காய் கார குழம்பு

Feb-24-2018
Surya Rajan
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

பூண்டு  முருங்கைக்காய் கார குழம்பு செய்முறை பற்றி

பூண்டு  முருங்கைக்காய் கார குழம்பு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. நல்லெண்ணெய் : 4 ஸ்பூன்
  2. பூண்டு  : 20 பல்
  3. முருங்கைக்காய் : 1
  4. தக்காளி : 1
  5. மிளகாய் : 2
  6. மஞ்சள் தூள் : ½  மேஜைக்கரண்டி
  7. பெருங்காய தூள் : சிறிதளவு
  8. புளி : நெல்லி அளவு
  9. மிளகாய் தூள்: 1 ஸ்பூன்
  10. மல்லி தூள்: 1 ½ ஸ்பூன்
  11. அரைக்க (தேங்காய் விழுது )
  12. தேங்காய் : 1 கையளவு
  13. சின்ன வெங்காயம் : 5
  14. தாளிக்க :
  15. கடுகு : 1 மேஜைக்கரண்டி
  16. கருவேப்பிலை : சிறிதளவு
  17. வெந்தயம் : ¼ மேஜைக்கரண்டி

வழிமுறைகள்

  1. ஒரு கடாயில் நல்லெண்ணெய் விட்டு  பூண்டு ,முருங்கைக்காய், தக்காளி,மிளகாய் சேர்த்து வதக்கவும் .
  2. பின் மிளகாய் தூள், மல்லி தூள் (அல்லது  குழம்பு மசாலா ) மஞ்சள் தூள் , சேர்த்து 2 நிமிடம் வதக்கவும் ( தேவையென்றால் சிறிதளவு தண்ணீர் சேர்த்து கொள்ளவும்)
  3. பின் புளி தண்ணீர் , உப்பு , தேவையான தண்ணீர் ஊற்றி மசாலா வாசனை போகும் வரை 15 நிமிடம் மிதமான தீயில் கொதிக்க வைக்க வேண்டும்.
  4. குழம்பில் இருந்து எண்ணெய் பிரிந்து வரும் வேளையில் அரைத்து வைத்துள்ள தேங்காய் மற்றும் சின்ன வெங்காய விழுது சேர்த்து 5 - 10 நிமிடம் மிதமான தீயில் குழம்பினை கொதிக்க விடவும் .
  5. மற்றொரு வாணலியில் நல்லெண்ணெய்  விட்டு கடுகு, வெந்தயம், கருவேப்பிலை சேர்த்து தாளித்து கொள்ளவும் .
  6. மேற்சொன்ன தாளிப்பினை குழம்பில் சேர்த்து 2 நிமிடம் கழித்து பெருங்காய தூள் சேர்த்து அடுப்பினை ஆப் செய்யவும்  .

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்