Photo of Brinjal in Tamarind Curry by Shaima Fathima at BetterButter
405
17
0.0(1)
0

Brinjal in Tamarind Curry

Feb-25-2018
Shaima Fathima
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. சிறு கத்தரிக்காய் - 10
  2. பூண்டு பெரியபல் - 3
  3. சிறு வெங்காயம் - 15
  4. புளி - சின்ன நெல்லிக்காய் அளவு
  5. நல்லெண்ணை - 3 தேக்கரண்டி
  6. கடுகு - 1/2 தேக்கரண்டி
  7. உளுந்தம்பருப்பு - 1 தேக்கரண்டி
  8. வத்தல் மிளகாய் - 1
  9. கறி வேப்பிலை - சிறிதளவு
  10. மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
  11. மிளகாய் தூள் - 1/2 தேக்கரண்டி
  12. சீரகத்தூள் - 1/2 தேக்கரண்டி
  13. சோம்பு தூள்(பெருஞ்சீரகத்தூள்) - 1 தேக்கரண்டி
  14. காயத்தூள் - 2 சிட்டிகை
  15. உப்பு - தேவைக்கு

வழிமுறைகள்

  1. அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு போடவும்.
  2. கடுகு வெடித்தபின் உளுந்தம்பருப்பு சேர்த்து சிவக்க விடவும்.
  3. அடுத்து வத்தல் மிளகு, கறிவேப்பிலை சேர்க்கவும்.அதனுடன் பூண்டை சிறிதாக நறுக்கி சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும்.
  4. பின்னர் சிறு வெங்காயத்தை சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கவும்.
  5. பின் புளிகரைசலுடன் அரை கப் தண்ணீர் சேர்த்து அத்துடன் மசாலா தூள்களை சேர்த்து 3 நிமிடம் கொதிக்கவிடவும்.
  6. குழம்பு கொஞ்சம் இறுகி வரும்போது வகுந்து வைத்த கத்தரிக்காவை சேர்த்து சிறு தீயில் 2 நிமிடம் வேக விடவும். பின் காயத்துள் சேர்த்து லேசாக கிளறி இறக்கி விடவும்.

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Dew Drops
Feb-26-2018
Dew Drops   Feb-26-2018

Wow

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்