காரமான மட்டன் வறுவல்/கறி வத்தல் | Spicy Mutton Fry/Kari Vathakal in Tamil

எழுதியவர் Rathy V  |  10th Mar 2016  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
 • Photo of Spicy Mutton Fry/Kari Vathakal by Rathy V at BetterButter
காரமான மட்டன் வறுவல்/கறி வத்தல்Rathy V
 • ஆயத்த நேரம்

  5

  நிமிடங்கள்
 • சமைக்கும் நேரம்

  35

  நிமிடங்கள்
 • பரிமாறும் அளவு

  2

  மக்கள்

213

0

காரமான மட்டன் வறுவல்/கறி வத்தல் recipe

காரமான மட்டன் வறுவல்/கறி வத்தல் தேவையான பொருட்கள் ( Ingredients to make Spicy Mutton Fry/Kari Vathakal in Tamil )

 • மல்லி - 2 தேக்கரண்டி
 • சீரகம் - 1 தேக்கரண்டி
 • சிவப்பு மிளகாய் -5
 • நல்லெண்ணை - 1தேக்கரண்டி
 • வதக்கவும் அரைக்கவும்:
 • கொத்துமல்லி இலைகள் - அலங்கரிப்பதற்கு
 • மஞ்சள் தூள் -3/4 தேக்கரண்டி
 • பெரிய வெங்காயம் - 1 நடுத்தர அளவிலானது (பொடியாக நறுக்கப்பட்டது)
 • நல்லெண்ணை - 3 தேக்கரண்டி
 • மிளகாய்ப்பொடி -1 மற்றும் 1/2 தேக்கரண்டி
 • தக்காளி சாஸ் - 2தேக்கரண்டி
 • எலும்பில்லா மட்டன் - 300 கிராம்

காரமான மட்டன் வறுவல்/கறி வத்தல் செய்வது எப்படி | How to make Spicy Mutton Fry/Kari Vathakal in Tamil

 1. மட்டனைச் சுத்தப்படுத்தி சிறுசிறு துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.
 2. வதக்கவும் அரைக்கவும் பட்டியலின் கீழ் கொடுக்கப்பட்டுள்ள சேர்வைப்பொருள்களை வதக்கி பவுடராக அரைத்துக்கொள்ளவும். அருமையான நறுமணம் வரும்வரை வதக்கவும். சிறு தீயில் 2 நிமிடங்கள் ஆகலாம்.
 3. எண்ணெயை பிரஷர் குக்கரில் சூடுபடுத்தி வெங்காயம் சேர்த்து, அது வெளுக்கும்வரை வதக்கவும்.
 4. சுத்தப்படுத்தி வெட்டப்பட்ட மட்டன் துண்டுகளைச் சேர்த்து மஞ்சளையும் சேர்த்து ஒரு கலக்கு கலக்கவும்.
 5. அரைத்த மசாலா தூளைச் சேர்த்து கலக்கி மட்டனை வேகவைக்கப் போதுமானத் தண்ணீர் விடவும். (கிட்டத்தட்ட 3/4 கப்). உப்பு சேர்த்து குக்கரை மூடவும்.
 6. மட்டனை குக்கரில் 7 அல்லது 8 விசில்களுக்கு அல்லது மிருதுவாகும்வரை வேகவைக்கவும். குக்கரைத் திறந்து தண்ணீர் வற்றும் வரைக் காத்திருக்கவும். அவ்வப்போது கலக்கவும்.
 7. தண்ணீர் அளவு சற்றே குறைந்ததும், மிளகாய்த் தூள் தக்காளி சாஸ் சேர்க்கவும். நன்றாகக் கலக்கவும்.
 8. காய்ந்து தேவையான பதத்திற்கு வரும்வரை அவ்வப்போது கலக்கி அடுப்பை நிறுத்தவும். கொத்துமல்லி சேர்த்து பரிமாறவும்.

எனது டிப்:

ஆவிபறக்கும் சாதத்தோடு அல்லது ரச சாதம் அல்லது ரொட்டியுடன் பரிமாறலாம். தோசையோடு இ்ன்னும் அதிக ருசியாக இருக்கும். மசாலா மிகவும் சுவையாக இருக்கும்.

Reviews for Spicy Mutton Fry/Kari Vathakal in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.