வீடு / சமையல் குறிப்பு / காரமான மட்டன் வறுவல்/கறி வத்தல்

Photo of Spicy Mutton Fry/Kari Vathakal by Rathy V at BetterButter
3522
36
0.0(0)
0

காரமான மட்டன் வறுவல்/கறி வத்தல்

Mar-10-2016
Rathy V
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
35 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • ஸாட்டிங்
  • சைட் டிஷ்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. எலும்பில்லா மட்டன் - 300 கிராம்
  2. தக்காளி சாஸ் - 2தேக்கரண்டி
  3. மிளகாய்ப்பொடி -1 மற்றும் 1/2 தேக்கரண்டி
  4. நல்லெண்ணை - 3 தேக்கரண்டி
  5. பெரிய வெங்காயம் - 1 நடுத்தர அளவிலானது (பொடியாக நறுக்கப்பட்டது)
  6. மஞ்சள் தூள் -3/4 தேக்கரண்டி
  7. கொத்துமல்லி இலைகள் - அலங்கரிப்பதற்கு
  8. வதக்கவும் அரைக்கவும்:
  9. நல்லெண்ணை - 1தேக்கரண்டி
  10. சிவப்பு மிளகாய் -5
  11. சீரகம் - 1 தேக்கரண்டி
  12. மல்லி - 2 தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. மட்டனைச் சுத்தப்படுத்தி சிறுசிறு துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.
  2. வதக்கவும் அரைக்கவும் பட்டியலின் கீழ் கொடுக்கப்பட்டுள்ள சேர்வைப்பொருள்களை வதக்கி பவுடராக அரைத்துக்கொள்ளவும். அருமையான நறுமணம் வரும்வரை வதக்கவும். சிறு தீயில் 2 நிமிடங்கள் ஆகலாம்.
  3. எண்ணெயை பிரஷர் குக்கரில் சூடுபடுத்தி வெங்காயம் சேர்த்து, அது வெளுக்கும்வரை வதக்கவும்.
  4. சுத்தப்படுத்தி வெட்டப்பட்ட மட்டன் துண்டுகளைச் சேர்த்து மஞ்சளையும் சேர்த்து ஒரு கலக்கு கலக்கவும்.
  5. அரைத்த மசாலா தூளைச் சேர்த்து கலக்கி மட்டனை வேகவைக்கப் போதுமானத் தண்ணீர் விடவும். (கிட்டத்தட்ட 3/4 கப்). உப்பு சேர்த்து குக்கரை மூடவும்.
  6. மட்டனை குக்கரில் 7 அல்லது 8 விசில்களுக்கு அல்லது மிருதுவாகும்வரை வேகவைக்கவும். குக்கரைத் திறந்து தண்ணீர் வற்றும் வரைக் காத்திருக்கவும். அவ்வப்போது கலக்கவும்.
  7. தண்ணீர் அளவு சற்றே குறைந்ததும், மிளகாய்த் தூள் தக்காளி சாஸ் சேர்க்கவும். நன்றாகக் கலக்கவும்.
  8. காய்ந்து தேவையான பதத்திற்கு வரும்வரை அவ்வப்போது கலக்கி அடுப்பை நிறுத்தவும். கொத்துமல்லி சேர்த்து பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்