Photo of Baby Corn Peas Masala by Wajithajasmine Raja mohamed sait at BetterButter
631
8
0.0(5)
0

Baby Corn Peas Masala

Feb-25-2018
Wajithajasmine Raja mohamed sait
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • சௌத்இந்தியன்
  • பிரெஷர் குக்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. பேபி கார்ன் -10-12 நறுக்கியது
  2. பட்டாணி - 1/2 கப்
  3. வெங்காயம் -1 நறுக்கியது
  4. தக்காள-1(பியூரியாக்கிக்கொள்ளவும்)
  5. பச்சை மிளகாய் -2
  6. தேங்காய் -3 தேக்கரண்டி
  7. வெள்ளை எள் -2 தேக்கரண்டி
  8. முந்திரி -5-6
  9. இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
  10. மஞ்சள் தூள்- 1/2 தேக்கரண்டி
  11. மிளகாய் தூள் -1 தேக்கரண்டி
  12. பட்டை -1
  13. ஏலக்காய் -3
  14. கிராம்பு -3
  15. சோம்பு -1/2 தேக்கரண்டி
  16. உப்பு -தேவையான அளவு
  17. எண்ணெய் தேவையான அளவு
  18. மல்லிஇலை - தேவையான அளவு

வழிமுறைகள்

  1. தேவையான பொருட்கள்
  2. முதலில் கார்னை சுத்தம் செய்து பாதியாக வெட்டிக்கொள்ளவும்.
  3. அடுப்பில் குக்கரை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை,கிராம்பு ,ஏலக்காய் ,சோம்பு போட்டு தாளித்து வெங்காயம் சேர்த்து வதக்கவும் .
  4. வெங்காயம் நன்கு வதங்கியதும் அதனுடன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசம் போகும் வரை வதக்கி அதனுடன் தக்காளி பியூரியை சேர்க்கவும்.
  5. தக்காளி நன்கு வதங்கியதும் மஞ்சள் தூள் மிளகாய் தூள்,உப்பு சேர்த்து வதக்கி பின்பு பேபி கார்ன்,பட்டாணியை சேர்த்து வதக்கவும் .
  6. மிக்சியில் தேங்காய் ,எளிய,பச்சை மிளகாய் ,முந்திரி தண்ணீர் சேர்த்து நன்கு மையாக அரைத்துக்கொள்ளவும் .
  7. அரைத்த கலவையை பட்டாணி ,பேபி கார்னுடன் சேர்த்து சிறிது நேரம் கிளறி தேவையான அளவு உப்பு ,தண்ணீர் சேர்த்து குக்கரில் 2-3 விசில் விடவும் .
  8. பின்பு அடுப்பில் இருந்து இறக்கி விசில் அடங்கியதும் மல்லிஇலைகளை தூவி பரிமாறவும் .
  9. சுவையான பேபி கார்ன் பட்டாணி மசாலா தயார்.
  10. சப்பாத்தி ,பூரிக்கு அருமையான சைட் டிஷ் ..

மதிப்பீடு (5)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Jayalakshmi
Feb-26-2018
Jayalakshmi   Feb-26-2018

Super

Priya Mohan
Feb-26-2018
Priya Mohan   Feb-26-2018

Very nice

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்