Photo of Ridge Gourd dhal kootu by Bena Aafra at BetterButter
436
4
0.0(1)
0

Ridge Gourd dhal kootu

Feb-26-2018
Bena Aafra
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. பீர்க்கங்காய் -2
  2. வெங்காயம் -2
  3. பருப்பு (வேகவைத்தது )
  4. தக்காளி -1
  5. பெருங்காயம்
  6. கடுகு
  7. உளுத்தம் பருப்பு
  8. கறிவேப்பிலை
  9. வரமிளகாய்
  10. எண்ணெய்
  11. மஞ்சள் தூள்
  12. பொட்டுக்கடலை(பொடி )
  13. தேங்காய் பூ

வழிமுறைகள்

  1. பீர்க்கங்காய் தோல் சீவி உள்ளே இருக்கும் விதையை எடுத்து விட்டு நறுக்கி கொள்ளவும். நன்றாக சுத்தம் செய்து வைக்கவும்.
  2. வெங்காயம், தக்காளி பொடியாக நறுக்கி கொள்ளவும்.
  3. அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை ,மிளகாய் ,சேர்த்து தாழிக்க வேண்டும்.
  4. எண்ணெயில் சிறிது பெருங்காயத்தூள் சேர்த்து கொள்ளவும்.
  5. பின் நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். சிறிது உப்பு சேர்த்து கொள்ளவும்.
  6. தக்காளி சேர்த்து வதக்கவும்.
  7. நன்றாக வதங்கியதும் நறுக்கிய பீர்க்கங்காய் சேர்த்து கிளறி விடவும். சிறிது தண்ணீர் சேர்த்து வேக விடவும்.
  8. காய் வெந்ததும் தேங்காய் பூ, மற்றும் வேகவைத்த பருப்பு சேர்த்து கிளறி விட்டு ,பொட்டுக்கடலை பொடியை சிறிது தூவிவிட்டு கிளறி இறக்கவும்.
  9. சுவையான பீர்க்கங்காய் பருப்பு கூட்டு தயார்.

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Pushpa Taroor
Feb-26-2018
Pushpa Taroor   Feb-26-2018

Good

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்