வீடு / சமையல் குறிப்பு / பூண்டு கார  குழம்பு

Photo of Poondu kara kulambu by Surya Rajan at BetterButter
830
4
0.0(0)
0

பூண்டு கார  குழம்பு

Feb-26-2018
Surya Rajan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

பூண்டு கார  குழம்பு செய்முறை பற்றி

பூண்டு கார  குழம்பு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • ஸாட்டிங்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. நல்லெண்ணெய் : 4 ஸ்பூன்
  2. உப்பு
  3. பூண்டு  : 20 - 30 பல்
  4. தக்காளி : 1
  5. மிளகாய் : 2
  6. மஞ்சள் தூள் : ½  ஸ்பூன்
  7. புளி : நெல்லி அளவு
  8. பெருங்காய தூள் : சிறிதளவு
  9. அரைக்க : (தேங்காய் விழுது )
  10. தேங்காய் : 1 கையளவு
  11. சின்ன வெங்காயம் : 5
  12. தாளிக்க :
  13. கடுகு : 1 ஸ்பூன்
  14. வெந்தயம் : ¼ ஸ்பூன்
  15. சின்ன வெங்காயம் : 2
  16. கருவேப்பிலை
  17. வறுத்து அரைக்க :
  18. மல்லி : 1 ஸ்பூன்
  19. சீரகம் : ½ ஸ்பூன்
  20. அரிசி : ½ ஸ்பூன்
  21. சிவப்பு மிளகாய்  : 4

வழிமுறைகள்

  1. வறுத்து அரைக்க கொடுக்கப்பட்டுள்ளதை வெறும் வாணலியில் 2 நிமிடம் மிதமான தீயில் வறுத்து எடுத்து கொள்ளவும்.
  2. பின் அதனை மையாக தண்ணீர் விட்டு அரைத்து கொள்ளவும்
  3. ஒரு கடாயில் நல்லெண்ணெய் விட்டு பூண்டு, வெங்காயம் , தக்காளி , மிளகாய் சேர்த்து  1 நிமிடம் வதக்கவும் .
  4. பின் வறுத்து அரைத்த மசாலா சேர்த்து 1 நிமிடம் வதக்கவும்
  5. பின் புளி தண்ணீர் , உப்பு , தேவையான தண்ணீர் ஊற்றி மசாலா வாசனை போகும் வரை 15 நிமிடம் மிதமான தீயில் கொதிக்க வைக்க வேண்டும்.
  6. குழம்பில் இருந்து எண்ணெய் பிரிந்து வரும் வேளையில் அரைத்து வைத்துள்ள தேங்காய் மற்றும் சின்ன வெங்காய விழுது சேர்த்து 5 - 10 நிமிடம் மிதமான தீயில் குழம்பினை கொதிக்க விடவும் .
  7. மற்றொரு வாணலியில் நல்லெண்ணெய்  விட்டு கடுகு, வெந்தயம் , சின்ன வெங்காயம் , கருவேப்பிலை சேர்த்து தாளித்து கொள்ளவும் .
  8. மேற்சொன்ன தாளிப்பினை குழம்பில் சேர்த்து 2 நிமிடம் கழித்து பெருங்காய தூள் சேர்த்து அடுப்பினை ஆப் செய்யவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்