வீடு / சமையல் குறிப்பு / வெஜ் சால்னா

Photo of Veg empty salna by neela karthik at BetterButter
798
2
0.0(0)
0

வெஜ் சால்னா

Feb-26-2018
neela karthik
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

வெஜ் சால்னா செய்முறை பற்றி

ஹோட்டல் ஸ்டைல் புரோட்டா சப்பாத்திக்கு ஏற்ற சால்னா ரெசிபி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டிபன் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • பாய்ளிங்
  • சைட் டிஷ்கள்
  • லோ கொலஸ்ட்ரால்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. கேரட் பீன்ஸ் உருளைகிழங்கு பட்டாணி 1/4 கப்
  2. வெங்காயம் 2
  3. தக்காளி 2
  4. பச்சை மிளகாய் 4
  5. இஞ்சி 1 சிறிய துண்டு
  6. பூண்டு 5 பல்
  7. சோம்பு 1 ஸ்பூன்
  8. பட்டை லவங்கம் 3
  9. ஏலக்காய் 2
  10. உப்பு தேவைக்கேற்ப
  11. எண்ணெய் 3 டேபிள் ஸ்பூன்
  12. தேங்காய் 2 டேபிள் ஸ்பூன்
  13. முந்திரி 5
  14. மல்லிதூள் 1/2 ஸ்பூன்
  15. மஞ்சள் தூள் 1/2 ஸ்பூன்
  16. கடுகு சீரகம் தாளிக்க

வழிமுறைகள்

  1. தேங்காய் முந்திரி சோம்பு சேர்த்து அரைத்து வைக்கவும்
  2. வெங்காயம் தக்காளி இஞ்சி பூண்டு மிளகாயை வதக்கி ஆற வைத்து அரைத்து கொள்ளவும்
  3. காய்கறிகளை நறுக்கி கழுவி வைத்து கொள்ளவும்
  4. வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு சீரகம் தாளித்து காய்கறிகளை சேர்த்து வதக்கவும்
  5. தண்ணீர் ஊற்றி பாதியளவு வேக வைக்கவும்
  6. பிறகு அரைத்த வெங்காயம் தக்காளி விழுதை சேர்த்து கிளறி மல்லி தூள் மஞ்சள் தூள் சேர்த்து தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்
  7. விழுதின் பச்சை வாசம் இல்லாமல் காய் வெந்த பிறகு உப்பு அரைத்த தேங்காய் முந்திரி விழுதை சேர்த்து கொதிக்க விட்டு இறக்கவும்
  8. இஞ்சி பூண்டு விழுதாக சேர்த்தால் காய் வதக்கும் பொழுது சேர்த்து வதக்கவும்
  9. விருப்பமான காய்கறிகள் சேர்க்கலாம் விரும்பினால் 1 கப் காய்கறிகள் சேர்க்கலாம்
  10. பரோட்டாவிற்கு மிக அருமையாக இருக்கும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்