வீடு / சமையல் குறிப்பு / ஹைதராபாத் சிக்கன் தம் பிரியாணி

Photo of Hyderabadi Murgh Dum Biryani by Bobby Kochar at BetterButter
6607
679
4.3(0)
0

ஹைதராபாத் சிக்கன் தம் பிரியாணி

Mar-11-2016
Bobby Kochar
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
40 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • மீடியம்
  • டின்னெர் பார்ட்டி
  • இந்திய
  • ஷாலோ ஃபிரை
  • விஸ்கிங்
  • ஃபிரையிங்
  • மெயின் டிஷ்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

  1. 1 கிலோ சிக்கன் எலும்போடு
  2. 1 கிலோ பாஸ்மதி பிரியாணி அரிசி
  3. 1/2 கிலோ வெங்காயத் துண்டுகள் வறுத்தது
  4. 1 பிரிஞ்சி இலை
  5. 1 இலவங்கப்பட்டை
  6. 1 தேக்கரண்டி சீரகம்
  7. 4 வெங்காயத் துண்டுகள்
  8. 1/2 கப் புதினா நறுக்கியது
  9. 1/2 கப் கொத்துமல்லி, நறுக்கியது
  10. கொஞ்சம் குங்குமப்பூத் தாள்கள்
  11. 1/2 கப் வெந்நீர்
  12. பன்னீர் தண்ணீர் சில துளிகள்
  13. 2-3 கிராம்பு
  14. 2-3 பச்சை ஏலக்காய்
  15. மேரினேட் செய்வதற்கு:1/2 கிலோ தயிர், கடையப்பட்டது
  16. 1 தேக்கரண்டி உப்பு
  17. 3/4 தேக்கரண்டி சிவப்பு மிளகாய்த் தூள்
  18. 1 தேக்கரண்டி நாட்டு மிளகாய்/காஷ்மீர் சிவப்பு மிளகாய்த்தூள்
  19. 1 தேக்கரண்டி மஞ்சள் தூள்
  20. 1 தேக்கரண்டி கரம் மசாலா
  21. 1 தேக்கரண்டி சிக்கன் மசாலா
  22. 1/2 தேக்கரண்டி துருவப்பட்ட ஜாதிக்காய்
  23. 1/2 தேக்கரண்டி ஜாதிக்காய் மேலோட்டுத்தூள்
  24. 1 தேக்கரண்டி இஞ்சிப்பூண்டு விழுது
  25. 1 பச்சை மிளகாய், பொடியாக நறுக்கியது
  26. 1 தேக்கரண்டி இலவங்கப்பட்டைத் தூள்

வழிமுறைகள்

  1. 1: அரை மணி நேரத்திற்குத் தண்ணீரில் அரிசியை ஊறவைக்கவும்.
  2. 2: சிக்கன் துண்டுகளைச் சுத்தப்படுத்திக் கழுவவும்.
  3. 3: மேரினேட் செய்வதற்குக் கீழ் கொடுக்கப்பட்டுள்ள தயிர் மற்றும் மசாலாவில் சிக்கன் துண்டுகளை குறைந்தபட்சம் 2 மணி நேரம் ஊறவைக்கவும்.
  4. 4. வெங்காயத் துண்டுகளை வறுத்துக்கொள்ளவும்.
  5. 5: குங்குமப்பூவை சூடான பாலில் ஊறவைத்து எடுத்து வைத்துக்கொள்ளவும்.
  6. 6: ஒரு கனமான அடிப்பாகமுள்ள பாத்திரத்தில் எண்ணெயைச் சூடுபடுத்திக்கொள்ளவும்.
  7. 7: 1 பிரிஞ்சி இலை, 1 இலவங்கப்பட்டை 1 தேக்கரண்டி சீரகம் சேர்க்கவும்
  8. 8: வெடிக்கும்போது, வெங்காயத் துண்டுகள் சேர்த்து அவை பொன்னிறமாகும்வரை வதக்கவும்.
  9. 9: சிக்கன் துண்டுகளைச் சேர்த்து அரைவேக்காட்டிற்கு வேகவைக்கவும்.
  10. 10. அரிசியை உப்புத் தண்ணீரில் இலவங்கப்பட்டை, கிராம்பு, ஏலக்காயுடன் கொதிக்கவிடவும்.
  11. 11. அடுப்பிலிருந்து இறக்கி அவை 3/4பாகம் தயாரானதும் வடிக்கட்டிக்கொள்ளவும். சற்றே கிளரிக்கொள்ளவும்.
  12. 12: ஒரு கனமாகஅடிப்பாக பாத்திரத்தில், சிக்கனைக் குழம்புடன் ஒரு அடக்குப் பரவச் செய்து ஒரு அடுக்கு சாதத்தை வைக்கவும். பன்னீர் தண்ணீரை, குங்குமப்பூ பாலைத் தெளித்து வறுத்த வெங்காயத்தில் 1/2 சேர்க்கவும். புதினாவையும் கொத்துமல்லியையும் சேர்க்கவும்.
  13. 13: மீண்டும் மீதமுள்ள சாதம் மற்றும் சிக்கனுக்கு இப்படியே செய்யவும்.
  14. 14: இறுக்கமாக மூடியால் மூடி கோதுமை மாவினால் சீல் செய்யவும்.
  15. 15: சூடானத் தவாவில் வைத்து சிறு தீயில்/தம்மில் 15 நிமிடங்கள் வேகவைக்கவும்.
  16. 16: 10 நிமிடங்களுக்கு இருக்கட்டும், அதன்பிறகு மூடியைத் திறக்கவும்.
  17. 17: குழம்பு வெங்காய வளையங்களோடு பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்