வீடு / சமையல் குறிப்பு / பீட்ரூட் பாயசம்

Photo of Beetroot Paayasam by Sony Karthik at BetterButter
63
4
0.0(0)
0

பீட்ரூட் பாயசம்

Feb-26-2018
Sony Karthik
8 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

பீட்ரூட் பாயசம் செய்முறை பற்றி

ருசியான பீட்ரூட் பாயசம் ரொம்ப நல்ல இருக்கும்.....நம்ம இப்போ பீட்ரூட் பாயாசம் பண்றது எப்படின்னு பாக்கலாமா.....பீட்ரூட் பாயசம் பண்ண தேவையானதை எடுத்துகோங்க... மிக்ஸியில் நாட்டு சர்க்கரையும், ஏலக்காயும் போட்டு நன்றாக பொடித்து கொள்ளவும்...இப்போ கடாயில் 2 தேக்கரண்டி நெய் ஊற்றி காய்ந்ததும் அதில முந்திரி, கிறிஸ்மிஸ் போட்டு நல்ல வதக்கி தனியாக எடுத்து வைத்து கொள்ளவும்..அப்புறம் அதுல சேமியா போட்டு நல்லா வதக்கி தனியாக எடுத்து வைத்து கொள்ளவும்..இப்போ கடாயில் மேலும் 1தேக்கரண்டி நெய் ஊற்றி பீட்ரூட்டை அதில போட்டு நன்றாக வதக்கவும்.... பீட்ரூட் நல்ல சுருங்கும் வரை வதக்கவும்...இங்க பாருங்க நெய்யும் பீட்ரூட்ம் நல்ல பிரிந்து வரும் வரை நன்றாக வதக்கவும். .....இப்போ இதில 2டம்ளர் பால் சேர்க்கவும்.... நல்ல நுரை கட்டிய பின் நம்ம நெய்யில் வதக்கி வைத்துள்ள முந்திரி, கிறிஸ்மிஸ்,சேமியா எல்லாம் சேர்த்து கிளறி விடவும்...5நிமிடம் நல்ல கொதிக்கவைங்க....இங்க பாருங்க செம ருசியான நம்ம பண்ண பீட்ரூட் பாயாசம் தயார்.......

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. 100 கிராம் பீட்ரூட்
  2. 3 மேஜைக்கரண்டி நாட்டு சர்க்கரை
  3. 8 ஏலக்காய்
  4. 10 முந்திரி
  5. 15 கிஸ்மிஸ்
  6. 7 சேமியாவை உடைத்து வைத்து கொள்ளவும்
  7. 3 தேக்கரண்டி நெய்
  8. 2 டம்ளர் பால்

வழிமுறைகள்

  1. பீட்ரூட் பாயசம் பண்ண தேவையானதை எடுதுக் கொள்ளவும்.
  2. மிக்ஸியில் நாட்டு சர்க்கரையும், ஏலக்காயும் போட்டு நன்றாக பொடித்து கொள்ளவும்.
  3. கடாயில் 2 தேக்கரண்டி நெய் ஊற்றி காய்ந்ததும் அதில் முந்திரி, கிஸ்மிஸ் போட்டு வதக்கி தனியாக எடுத்து வைத்து கொள்ளவும். பின் சேமியா போட்டு வதக்கி தனியாக எடுத்து வைத்து கொள்ளவும். கடாயில் மேலும் 1 தேக்கரண்டி நெய் ஊற்றி துருவிய பீட்ரூட்டை போட்டு நன்றாக வதக்கவும். துருவிய பீட்ரூட் நன்கு சுருங்கும் வரை வதக்கவும்.
  4. நெய்யும் பீட்ரூட்ம் பிரிந்து வரும் வரை நன்றாக வதக்கவும்.
  5. இப்போ இதில 2டம்ளர் பால் சேர்க்கவும்.... நல்ல நுரை கட்டிய பின் நம்ம நெய்யில் வதக்கி வைத்துள்ள முந்திரி, கிறிஸ்மிஸ்,சேமியா எல்லாம் சேர்த்து கிளறி விடவும்...5நிமிடம் நல்ல கொதிக்கவைங்க....
  6. இங்க பாருங்க செம ருசியான நம்ம பண்ண பீட்ரூட் பாயாசம் தயார்.......

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்