வீடு / சமையல் குறிப்பு / வெண்டைக்காய் கறி

Photo of Ladies finger Curry by Krishnasamy Vidya Valli at BetterButter
781
2
0.0(0)
0

வெண்டைக்காய் கறி

Feb-26-2018
Krishnasamy Vidya Valli
40 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

வெண்டைக்காய் கறி செய்முறை பற்றி

குழந்தைகள் விரும்பும் காய் இந்த வெண்டைக்காய். சத்து நிறைந்தது. அவர்களுக்கு அதிகம் எண்ணெய் மற்றும் காரமும் இல்லாமல் பச்சை நிறம் அதிகம் மாறாமல் சத்து குறையாமல் இருக்கும் கறி வகை இது. தயிர் சாதத்துடனும் சாப்பிடலாம். ரோஸ்ட் செய்தால் வெண்டைக்காயின் சத்து போய்விடும். இப்படி செய்தால் ஆரோக்கியமாகவும் இருக்கும்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. வெண்டைக்காய் - பொடியாக நறுக்கியது 2 கப்
  2. மஞ்சள் பொடி -2 சிட்டிகை
  3. உப்பு -1 தேக்கரண்டி
  4. மிளகு பொடி /காஷ்மீர் சில்லி பவுடர் -1/2 தேக்கரண்டி
  5. தனியா பொடி -1/2 தேக்கரண்டி
  6. தாளிக்க
  7. தேங்காய் எண்ணெய் -2 தேக்கரண்டி
  8. கடுகு -1 தேக்கரண்டி
  9. உளுத்தம் பருப்பு -1 தேக்கரண்டி
  10. பெருங்காயம் -4 சிட்டிகை
  11. மிளகாய் வத்தல் -1

வழிமுறைகள்

  1. கறி செய்வதற்கு அரைமணி நேரம் முன்னதாகவே வெண்டைக்காயை அலம்பி துடைத்து நறுக்கி துணியில் அல்லது நாளிதழ்களில் காற்றில் காய வுடவும்.மிகவும் பொடியாக நறுக்கினால் ஒன்றுடன் ஒன்று ஒட்டிக் கொள்ளும்.
  2. கடாயில் தாளிக்க கொடுத்தவற்றை தாளித்து வெண்டைக்காயை சேர்த்து வதக்கவும்.
  3. பாதி வதங்கியதும் உப்பு மற்றும் எல்லா பொடிகளும் சேர்க்கவும்
  4. அடுப்பை சிம்மில் வைத்து வதக்கவும்
  5. பச்சை நிறம் மாறத்தொடங்கும்போது இறக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்