வீடு / சமையல் குறிப்பு / கேரட் பொரியல்

Photo of Carrot Poriyal  by Krishnasamy Vidya Valli at BetterButter
446
2
0.0(0)
0

கேரட் பொரியல்

Feb-26-2018
Krishnasamy Vidya Valli
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

கேரட் பொரியல் செய்முறை பற்றி

ஹோட்டல்களில் அதிகம் வைக்கும் கறிவகைகளில் ஒன்று இது. எண்ணெய் காரம் இரண்டுமே அதிகம் இல்லாமல் குழந்தைகளுக்கு கொடுப்பதற்கு ஏற்றாற்போல் செய்யப்படும் பொரியல்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பாய்ளிங்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. கேரட் -3 அல்லது 4 (நறுக்கியவை 2 கப் இருக்க வேண்டும்)
  2. உப்பு -1 தேக்கரண்டி
  3. மஞ்சள் பொடி -2 சிட்டிகை
  4. தேங்காய் துருவல் -2 மேஜைக்கரண்டி
  5. தாளிக்க
  6. எண்ணெய் -1/2 தேக்கரண்டி
  7. கடுகு -1 தேக்கரண்டி
  8. உளுத்தம் பருப்பு -1 தேக்கரண்டி
  9. மிளகாய் வத்தல் -2
  10. கருவேப்பிலை -2 ஆர்க்கு
  11. பெருங்காயம் -4 சிட்டிகை

வழிமுறைகள்

  1. கேரட்டை சதுரம் சதுரமாக நறுக்கி உப்பு மஞ்சள் பொடி சேர்த்து சிறிது தண்ணீர் தெளித்து வேகவிடவும். மைக்ரோ வேவ் அவனிலும் வேகவைத்து எடுக்கலாம். வேகவைக்க தண்ணீர் அளவாக வைக்கவும். வடிகட்டினால் சத்து போய்விடும்.
  2. கடாயில் தாளிக்க கொடுத்தவற்றை தாளித்து வேகவைத்த கேரட் சேர்த்து வதக்கவும்
  3. அதிக நேரம் வதக்க வேண்டியதில்லை. இரண்டு மூன்று நிமிடங்கள் போதுமானது.
  4. தேங்காய் துருவல் சேர்த்து இறக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்