வீடு / சமையல் குறிப்பு / ஸ்பைஸி வாழைக்காய் கறி

Photo of Spicy Raw banana curry by Krishnasamy Vidya Valli at BetterButter
244
2
0.0(0)
0

ஸ்பைஸி வாழைக்காய் கறி

Feb-26-2018
Krishnasamy Vidya Valli
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

ஸ்பைஸி வாழைக்காய் கறி செய்முறை பற்றி

வாழைக்காய் வைத்து செய்யும் இந்த கறி ரைஸ்/சப்பத்தி/நாண் /ரெட்டி இப்படி எதற்கும் தொட்டுக்கொள்ளலாம்.எண்ணெய் அதிகம் தேவையில்லை. மசாலா பொடியும் மொத்தமாக செய்து வைத்துக்கொள்ளலாம். எந்த கறிக்கு வேண்டுமானாலும் சேர்க்கலாம் . இது நோ ஆனியன் நோ கார்லிக் வகையை சேர்ந்த்து.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • ஃப்யூஷன்
  • பாய்ளிங்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. வாழைக்காய் -2
  2. மஞ்சள் பொடி - 1/4 தேக்கரண்டி
  3. உப்பு -1 தேக்கரண்டி
  4. வறுத்து திரிக்க
  5. கடலைப்பருப்பு -1 தேக்கரண்டி
  6. உளுத்தம் பருப்பு -1 தேக்கரண்டி
  7. கொத்தமல்லி விதை -1 தேக்கரண்டி
  8. தேங்காய் துருவல் -1 தேக்கரண்டி
  9. சீரகம் -1/4 தேக்கரண்டி
  10. மிளகு -1/4 தேக்கரண்டி
  11. மிளகாய் வத்தல் -4
  12. வேர்கடலை -1 தேக்கரண்டி
  13. எள்ளு -1/4 தேக்கரண்டி
  14. கட்டி பெருங்காயம் -1 சிறிய துண்டு
  15. கருவேப்பிலை -2 ஆர்க்கு
  16. புளி -1 சிறிய துண்டு
  17. விருப்பப்பட்டால் பட்டை ஏலக்காய் கிராம்பு தலா இரண்டு சேர்க்கவும்
  18. தாளிக்க
  19. எண்ணெய் -1 தேக்கரண்டி
  20. கடுகு -1 தேக்கரண்டி
  21. உளுத்தம் பருப்பு -1 தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. வாழைக்காயை தோல் சீவி நறுக்கி உப்பு மஞ்சள் பொடி தண்ணீர் சேர்த்து வேகவிடவும்
  2. அதிகப்படியான தண்ணீரை வடிகட்டிக்கொள்ளவும்
  3. வறுத்து திரிக்க கொடுத்தவற்றை வறுத்து மிக்ஸியில் கரகரப்பாக திரிக்கவும்
  4. கடாயில் தாளிக்க கொடுத்தவற்றை தாளித்து வேகவைத்த வாழைக்காயை சேர்த்து வதக்கவும்
  5. திரித்ததை சேர்த்து வதக்கி இறக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்