Photo of Amla poriyal by Sony Karthik at BetterButter
922
7
0.0(1)
0

Amla poriyal

Feb-27-2018
Sony Karthik
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
1 மக்கள்
பரிமாறவும்

Amla poriyal செய்முறை பற்றி

என்றும் குன்றாத இளமை தரும் அமிழ்தம்...எல்லாரும் வாங்க கூடிய இயற்கை அளித்த நெல்லிக்காய்.. ரொம்ப மருத்துவ குணங்கள் வாய்ந்தது... இதுல ஒரு பொரியல்... நம்ம இப்போ இத எப்படி பண்ணலாம்னு பாக்கலாமா...நம்ம பொரியல் பண்ண தேவையான பொருள்கள் அனைத்தையும் எடுத்து கொள்வோம்....ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி நெல்லிக்காயை வேக வைக்கவும்....நன்றாக வெந்ததும் சிறு சிறு துண்டுகளாக நறுக்கவும்... இப்போ ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு,கருவேப்பிலை,1 மேஜைக்கரண்டி பெருங்காயத்தூள் போட்டு அப்புறம் அதுல பொடியாக நறுக்கிய பூண்டு வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.....இப்போ இதில் 2மேஜைக்கரண்டி தேங்காய் துருவலை சேர்த்து நன்றாக வதக்கவும்.....நம்ம சிறிதாக நறுக்கிய நெல்லிக்காய் போட்டு நன்றாக கிளறவும்... இப்போ இதுல 1 மேஜைக்கரண்டி மிளகாய் தூள் மற்றும் சீரகத்தூள் சேர்த்து நன்றாக வதக்கவும்....தேவைக்கேற்ப உப்பு சேர்க்கவும்...நன்றாக வதக்கி விடவும்...மூன்று சுவைகள் கூடிய நெல்லிக்காய் பொரியல் தயார்...... இதன் சுவை முதல துவர்ப்பு அப்புறம் புளிப்பாக இருக்கும் கடைசியா கொஞ்சம் இனிக்கும் ...எப்படி நம்ம பண்ண நெல்லிக்காய் பொரியல் சூப்பர். ல......

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 1

  1. 4 பெரிய நெல்லிக்காய்
  2. 2 தேக்கரண்டி
  3. 1 பல் பூண்டு
  4. 4 சின்ன வெங்காயம்
  5. 1 மேஜைக்கரண்டி கடுகு
  6. 1 மேஜைக்கரண்டி பெருங்காயதூள்
  7. 1 மேஜைக்கரண்டி மிளகாய் தூள்
  8. 1 மேஜைக்கரண்டி சீரக தூள்
  9. 2 மேஜைக்கரண்டி தேங்காய் துருவல்
  10. தேவைக்கேற்ப உப்பு மற்றும் தண்ணீர்

வழிமுறைகள்

  1. பொரியல் பண்ண தேவையான பொருள்கள் அனைத்தையும் எடுத்து கொளளவும்.
  2. ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி நெல்லிக்காயை வேக வைக்கவும்
  3. நன்றாக வெந்ததும் சிறு சிறு துண்டுகளாக நறுக்கவும். கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு,கருவேப்பிலை,1 மேஜைக்கரண்டி பெருங்காயத்தூள் போட்டு பொடியாக நறுக்கிய பூண்டு, வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.
  4. அதில் 2மேஜைக்கரண்டி தேங்காய் துருவலை சேர்த்து வதக்கவும். நறுக்கிய நெல்லிக்காய் போட்டு கிளறவும். இப்போ இதுல 1 மேஜைக்கரண்டி மிளகாய் தூள் மற்றும் சீரகத்தூள் சேர்த்து வதக்கவும். தேவைக்கேற்ப உப்பு சேர்க்கவும். நன்றாக வதக்கி விடவும்.
  5. மூன்று சுவைகள் கூடிய நெல்லிக்காய் பொரியல் தயார்.

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Feb-27-2018
  Feb-27-2018

:heart_eyes:

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்