உருளைக்கிழங்கு கறி | Potato Curry in Tamil

எழுதியவர் Yasmin Shabira  |  27th Feb 2018  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
  • Photo of Potato Curry by Yasmin Shabira at BetterButter
உருளைக்கிழங்கு கறிYasmin Shabira
  • ஆயத்த நேரம்

    10

    நிமிடங்கள்
  • சமைக்கும் நேரம்

    15

    நிமிடங்கள்
  • பரிமாறும் அளவு

    2

    மக்கள்

3

0

உருளைக்கிழங்கு கறி recipe

உருளைக்கிழங்கு கறி தேவையான பொருட்கள் ( Ingredients to make Potato Curry in Tamil )

  • உருளைக்கிழங்கு - 2
  • வெங்காயம் -1
  • தக்காளி - 2
  • பச்சை மிளகாய் - 2
  • இஞ்சிபூண்டு விழுது - 1
  • மல்லிதழை - ஒரு கொத்து
  • பட்டை - ஒரு துண்டு
  • ரம்ப இலை - 1 (optional)
  • மிளகாய்தூள் - 1 மேசைகரண்டி
  • மஞ்சள்தூள் - 1/4 தேக்கரண்டி
  • கரம்மசாலா - 1 தேக்கரண்டி
  • ஜீரகதூள் - 1/2 தேக்கரண்டி
  • மல்லிதூள் - 1/2 தேக்கரண்டி
  • எண்ணெய் - 3 தேக்கரண்டி
  • உப்பு - தே.அளவு

உருளைக்கிழங்கு கறி செய்வது எப்படி | How to make Potato Curry in Tamil

  1. உருளைக்கிழங்கை வேக வைத்து தோல் நீக்கிக்கொள்ளவும்..
  2. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை மற்றும் ரம்ப இலைசேர்க்கவும்...
  3. பிறகு வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கவும்...
  4. வெங்காயம் நன்றாக வதங்கிய பின் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசணை போகும் வரை நன்றாக வதக்கவும்...
  5. பிறகு தக்காளி சேர்க்கவும்... தக்காளி நன்றாக மசிந்த பின் அனைத்து மசாலாக்களையும் சேர்த்து 3 நிமிடம் நன்றாக வதக்கவும்..
  6. மசாலா நன்றாக வதங்கி எண்ணெய் பிறிந்த பிறகு அதில் வேக வைத்த உருளைக்கிழங்கை சேர்த்து கிளறி தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்க விடவும்...
  7. 2 - 3 துண்டு உருளைக்கிழங்கை மட்டும் கரண்டி கொண்டு நன்றாக மசித்து விடவும், இதனால் கலவை சற்று சுவை கூடுவதுடன் கெட்டித் தன்மையும் கிடைக்கும்...
  8. நன்றாக கொதித்த பிறகு மல்லி தழை தூவி இறக்கினால் சுவையான மிக ஈசியாக செய்யக்கூடிய உருளைக்கிழங்கு கறி தயார்!!!!
  9. சப்பாத்தி மற்றும் பூரிக்கு மிக அருமையாக இருக்கும்

Reviews for Potato Curry in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.