வீடு / சமையல் குறிப்பு / உருளைக்கிழங்கு கறி

Photo of Potato Curry by Yasmin Shabira at BetterButter
459
4
0.0(0)
0

உருளைக்கிழங்கு கறி

Feb-27-2018
Yasmin Shabira
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

உருளைக்கிழங்கு கறி செய்முறை பற்றி

சப்பாத்திக்கு ஏற்ற அருமையான சைட்டிஷ்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • ஸாட்டிங்
  • சைட் டிஷ்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. உருளைக்கிழங்கு - 2
  2. வெங்காயம் -1
  3. தக்காளி - 2
  4. பச்சை மிளகாய் - 2
  5. இஞ்சிபூண்டு விழுது - 1
  6. மல்லிதழை - ஒரு கொத்து
  7. பட்டை - ஒரு துண்டு
  8. ரம்ப இலை - 1 (optional)
  9. மிளகாய்தூள் - 1 மேசைகரண்டி
  10. மஞ்சள்தூள் - 1/4 தேக்கரண்டி
  11. கரம்மசாலா - 1 தேக்கரண்டி
  12. ஜீரகதூள் - 1/2 தேக்கரண்டி
  13. மல்லிதூள் - 1/2 தேக்கரண்டி
  14. எண்ணெய் - 3 தேக்கரண்டி
  15. உப்பு - தே.அளவு

வழிமுறைகள்

  1. உருளைக்கிழங்கை வேக வைத்து தோல் நீக்கிக்கொள்ளவும்..
  2. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை மற்றும் ரம்ப இலைசேர்க்கவும்...
  3. பிறகு வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கவும்...
  4. வெங்காயம் நன்றாக வதங்கிய பின் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசணை போகும் வரை நன்றாக வதக்கவும்...
  5. பிறகு தக்காளி சேர்க்கவும்... தக்காளி நன்றாக மசிந்த பின் அனைத்து மசாலாக்களையும் சேர்த்து 3 நிமிடம் நன்றாக வதக்கவும்..
  6. மசாலா நன்றாக வதங்கி எண்ணெய் பிறிந்த பிறகு அதில் வேக வைத்த உருளைக்கிழங்கை சேர்த்து கிளறி தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்க விடவும்...
  7. 2 - 3 துண்டு உருளைக்கிழங்கை மட்டும் கரண்டி கொண்டு நன்றாக மசித்து விடவும், இதனால் கலவை சற்று சுவை கூடுவதுடன் கெட்டித் தன்மையும் கிடைக்கும்...
  8. நன்றாக கொதித்த பிறகு மல்லி தழை தூவி இறக்கினால் சுவையான மிக ஈசியாக செய்யக்கூடிய உருளைக்கிழங்கு கறி தயார்!!!!
  9. சப்பாத்தி மற்றும் பூரிக்கு மிக அருமையாக இருக்கும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்